இடுகைகள்

பேஸ் ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேஸ் ஆப்பின் நிறுவனர் பேட்டி!

படம்
உலகமெங்கும் சக்கைப்போடு போடும் பேஸ் ஆப்பின் நிறுவனர் யாரோஸ்லேவ் கொன்சரோவ், மைக்ரோசாப்டில் பணியாற்றியவர். இன்று நாற்பது வயதில் உலகம் முழுக்க தன் பேஸ் ஆப் மூலம் பிரபலமாகி இருக்கிறார். இத்தனைக்கு இந்த ஆப் செய்வது உங்கள் தற்போதைய புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வயதாக்கி காட்டுவது மட்டுமே. இக்கம்பெனியில் பணியாற்றுவது பனிரெண்டு பேர்கள்தான். ரஷ்ய தயாரிப்பு என்றால் அமெரிக்கா சும்மாயிருக்குமா உடனே பேஸ் ஆப் பயனர்களின் தகவல்களை திருடுகிறது என கட்டுரைகள் எழுதுவதோடு அங்குள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர்களும் இதுபற்றி வாய்க்கு வந்ததை பேசத் தொடங்கிவிட்டனர். இற்கு யாரோஸ்லோவ் என்ன பதில் சொல்லுகிறார்? இரண்டு மணிநேரத்தில் எனக்கு 300 போன் அழைப்புகள் வந்துவிட்டன. என்னால் தினசரி வேலைகளைக் கூட செய்யமுடியவில்லை. பேஸ் ஆப்பின் பிரைவசியை மேம்படுத்தும் பணியில்தான் இருக்கிறோம். எங்களுடைய ஆப் இன்று ஆண்ட்ராய்டு, ஐஸ்டோர் என அனைத்திலும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் இதில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பகிர்ந்து மகிழ்கின்றனர். காரணம், யாருக்குமே பத்து வரு