இடுகைகள்

மஞ்சள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்

பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி.  பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன்.  முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

புவிசார் குறியீடு வென்ற ஈரோடு

படம்
the hindu ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு இந்தியாவில் மகாராஷ்டிரம், தெலங்கானா, ஈரோடு ஆகிய மாநிலங்களில் பெருமளவு மஞ்சள் சாகுபடி ஆகிறது. ஈரோட்டில் தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, கோபிசெட்டி பாளையம், அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகள் ஈரோட்டில் மஞ்சள் விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. மாநில அரசு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது. ஏறத்தாழ 25 ஆயிரம் விவசாயிகள் மஞ்சள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது சரியான விலை கிடைக்காததால் அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. ஈரோட்டில் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி செலவிடும் தோராயத் தொகை 1.72 லட்சம். ஆனால் கிடைப்பது அதற்கும் குறைவு என்றால் எப்படி விவசாயம் செழிக்கும்? தெலங்கான, மகாராஷ்டிரத்தை விட உற்பத்திச் செலவு ஈரோட்டில் அதிகம். நன்றி: TOI

எச்சரிக்கை பலகைகளில் சிவப்பு ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? எச்சரிக்கைப் பலகைகள் ஏன் சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன? உயிரியல் அடிப்படையில் சிவப்பு என்பதை நெருப்பு, அபாயம் என நம் நினைவுகளில் பதிந்து வைத்திருக்கிறோம். எனவே சிவப்பு நிறம் என்றால் சடக்கென ஆதிநினைவான நெருப்பின் நிறத்திலிருந்து நிகழுக்கு மீண்டு வண்டி பிரேக்கை இழுத்துப்பிடித்து நிற்போம். அதேசமயம் சில நாடுகளில் நீலநிற விளக்கு போன்ற பரிசோதனைகளையும் செய்கிறார்கள். இயற்பியல் காரணத்தைப்  பார்த்தால், சிவப்பு பனியோ மழையோ அனைத்து கண்டிஷன்களிலும் பளிச்சென அனைவரையும் ரீச்சாகும். அதேநேரம் சீனாவில் மஞ்சள் பின்னணியில் கறுப்பு கோடுகள் பயன்படுகின்றன.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்