தேனீயின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் எரிச்சல், வீக்கத்திற்கான ஓமியோபதி மருந்து!
4 மருந்து = நஞ்சு ஓமியோபதி அல்லியம் செபா என்ற மருந்தைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்னர், ஓமியோபதி மருந்துகளை முறையாக மருத்துவரின் பரிந்துரைகளின்படி சாப்பிடவேண்டும். அல்லாதபோது, அதன் பக்கவிளைவுகளை ஒருவர் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஓமியோபதி மருத்துவரிடம் மருந்துகளை வாங்கினாலும் கூட, மருந்தின் ஆபத்தான பக்க விளைவுகளைப் பொறுத்து, அதை கூறும்படி தொலைபேசி எண்களை கொடுப்பதுண்டு. மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளுக்கு ஏற்ப மருத்துவர், மாற்று மருந்துகளை அல்லது அதை சமாளிக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்குவார். ஓமியோபதி மருந்துகள் சர்க்கரை, மதுவை சாரமாக கொண்டு பக்குவப்படுத்துதல் முறையைக் கொண்டவை. ஆனால் மருந்து என்பது என்பது மருந்துதான். அதை மறந்துவிடாதீர்கள். சிவப்பு வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் தாய் திராவகமே அல்லியம் செபா. பொதுவாக வெங்காயத்தை சளிக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு. பருவகாலங்களில் கடுமையான பூக்களின் நறுமணம் வீசும்போது, மகரந்தம் மூலம் ஒவ்வாமை உருவாகி தும்மல் கடுமையாக தொடரலாம். கூடவே கண், மூக்கில் நீர் வடியும். காய்ச்சலும் கூட லேசாக வரக்கூடும். தும்மல், ...