இடுகைகள்

ஒளிச்சேர்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

படம்
  அறிவியல் எப்படி வேலை செய்கிறது? அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட். கவனித்தல் அல்லது கண்காணித்தல் அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம்.  இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும்.  ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட்ட வெப்பநிலையி

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

சிக்கலான புரதங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்தவர்! - ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர்

படம்
  ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர் (Felix hoppe-seyler  1825-1895) ஃபெலிக்ஸ் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளை தோற்றுவித்த ஆய்வாளர்களில் ஒருவர் என கருதுகின்றனர். இவர், ஜெர்மனியின் ஃபிரெபர்க் நகரில் பிறந்தார். ஒன்பது வயதில் பெற்றோரை இழந்தார்.  ஃபெலிக்ஸின் உறவினரான மருத்துவர் செய்லரால்  தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். 1850ஆம் ஆண்டு பெர்லின் நகரில் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவரானார்.  1860ஆம் ஆண்டு பெர்லின் நகரில்  உதவி பேராசிரியராக பணியாற்றினார். 1862ஆம் ஆண்டு, இவர் மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் பற்றி ஆராய்ந்தார். இதன் வழியாக தாவரங்களில் உள்ள குளோரோபில் வேதிப்பொருள் மூலம் நடைபெறும் ஒளிச்சேர்க்கை பற்றிய முக்கியமான ஆய்வை செய்தார்.  புரோட்டெய்ட்ஸ் (Proteids) எனும் சிக்கலான புரதங்கள் பற்றிய ஃபெலிக்ஸின் ஆராய்ச்சி முக்கியமானது. 1877ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பிசியாலஜிகல் கெமிஸ்ட்ரி என்ற இதழைத் தொடங்கி, 1895ஆம் ஆண்டு காலமாகும்வரை அதன் ஆசிரியராக செயல்பட்டார்.   https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/hoppe-seyler-felix   

க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி

படம்
  மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி! பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள்  இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள்  நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள்  அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக  புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.  1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை. இதனால், மரங்கள் தங்களின் தனி

மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்களின் யுக்தி!

படம்
  மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்கள்! வெயில் போல மழையும் அனைத்து தாவரங்களுக்கும் தேவையானது. ஆனால், சிலவகை தாவரங்கள் மழை மூலமாக நோய் ஏற்படும் என்பதை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள சில முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றன. அதில் முடிக்கற்றை போன்ற மெல்லிய இழைகளைக் கொண்ட தாவரங்கள் முன்னணியில் உள்ளன. இவை. இழைபோன்ற ட்ரைகோம்ஸ் எனும் அமைப்பைப் பயன்படுத்தி மழையை உணர்கின்றன. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகின்றன என ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  தாவரங்களுக்கும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உள்ளது. மழை மூலமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள் எளிதாக தாவரத்திற்குள் நுழைந்து அதை தாக்க முடியும் என்பதுதான்.  அரபிடோப்சிஸ் தலியானா (Arabidopsis thaliana) எனும் தாவரத்தை வைத்து, பேராசிரியர் யாசுவோமி டாடா, உதவி பேராசிரியர் மிகா நோமோடோ ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்கள் தாவரத்தின் ஆர்என்ஏ வரிசையை சோதித்து, மழைக்கு எதிராக தூண்டப்படும் மரபணுக்களை அடையாளம் காண முயன்றனர்.  நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களாக காம்டா (

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க

மரம் நேராக வளருவது எப்படி?

படம்
மரம் எப்படி சரிவிலும் கூட நேராக வளருகிறது? அதற்கு காரணம் பூமியின் ஈர்ப்பு விசையை அறிந்து அதனை மேல்நோக்கி வளர்க்க வைக்கும் ஸ்டேட்டோலித்ஸ் எனும் நுட்பம். இது தாவரம் ஒளிச்சேர்க்கைக்கு ஏற்றபடி வளருவதற்கான உந்துதலை அளிக்கிறது. இதற்கேற்ப மரம் அல்லது செடி வளருகிறது. இதனால்தான் சரிவில் வளரும் மரம் கூட கிடைமட்டமாக நீண்டு வளரும் விநோதம் நடைபெறுகிறது.