க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி
மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி!
பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள் இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள் அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.
1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை. இதனால், மரங்கள் தங்களின் தனிப்பட்ட இடைவெளியை பராமரிக்கின்றன என்ற முடிவுக்கு வந்தார்.
காடுகளிலுள்ள இளைய மரங்களை விட வயது முதிர்ந்த மரங்கள் க்ரௌன் ஷைனெஸ் இயல்பைக் கொண்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக கறுப்பு மாங்குரோவ், யூகலிப்டஸ், காம்போர், சிட்கா ஸ்ப்ரூஸ், ஜப்பான் லார்ச் ஆகிய மரங்களைக் கூறலாம். மரங்களின் இடைவெளி இயல்பால் கிடைக்கும், சூரிய வெளிச்சம் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கிடைப்பது முக்கியமானது. இதனால் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. விலங்குகளுக்கும் அவசியமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.
dream 2047
may 2022
Crown shyness - a process of physical distancing among plants
https://www.nhm.ac.uk/discover/crown-shyness-are-trees-social-distancing.html
https://people.clas.ufl.edu/fep/
https://www.journals.elsevier.com/forest-ecology-and-management/editorial-board/francis-e-jack-putz
கருத்துகள்
கருத்துரையிடுக