மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவிய நரம்பியலாளர்! கோர்பினியன் பிராட்மன்

 


















கோர்பினியன் பிராட்மன் (Korbinian Brodmann 1868-1918)


ஜெர்மனியின் தெற்குப் பகுதியில்  பிறந்தவர் பிராட்மன். பெற்றோர் ஜோசப் பிராட்மன், சோபி பேங்க்லர். நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து, 20 வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்தார். தனது 30வது வயதில் உளவியல், நரம்பியல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது அலாயிஸ் அல்சீமர் என்பவர், டிமென்ஷியா நோய்க்காக பிராட்மன்னை சந்தித்தார். 

பெர்லினில் உள்ள தனியார் ஆராய்ச்சிக்கூடத்தில் அல்சீமரின் செரிபிரல் கார்டெக்ஸ்  பகுதியை ஆராய்ந்தார். வோக்ட் (Vogt), எடிங்கர் (Edinger), வெய்கெர்ட்( Weigert) ஆகிய மருத்துவர்களால் பிராட்மன் ஊக்கப்படுத்தப்பட்டார். 1910ஆம் ஆண்டு டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, பல்கலைக்கழக உளவியல் மருத்துவமனையிலும் முக்கிய பங்கு வகித்தார். பிறகுதான், மருத்துவ ஆராய்ச்சியில் முழுக்க இறங்கினார்.

 நுண்ணோக்கி மூலம் மூளையின் செரிபிரல் கார்டெக்ஸ் பகுதியை ஆராய்ந்து வரைபடமாக்கும் முறையை உருவாக்கினார். ஆராய்ச்சியாளர்கள் மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவியதில் நரம்பியலாளரான பிராட்மனின் பங்கு முக்கியமானது. 

https://www.researchgate.net/publication/49630717_Korbinian_Brodmann_1868-1918_and_His_Contributions_to_Mapping_the_Cerebral_Cortex

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்