இந்திய கடல் ஆமைகள்!
இந்திய கடல் ஆமைகள்!
தோணியாமை (Leatherback turtle)
அறிவியல் பெயர்: டெர்மோசிலிஸ் கோரியாசியா (Dermochelys coriacea)
நீளம்: 170 செ.மீ
எடை: 500 கி.கி
உணவு : ஜெல்லி மீன்
வாழுமிடம் : அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தெரியுமா?:
கடல் ஆமைகளில் மிகப்பெரியது தோணியாமை இனம்தான்.
சித்தாமை அல்லது பங்குனி ஆமை (Olive ridley turtle)
அறிவியல் பெயர் லெபிடோசெல்ஸ் ஆலிவாசியா (Lepidochelys olivacea)
நீளம்: 62-70 செ.மீ.
எடை: 45 கி.கி
உணவு: இறால், நண்டு, சிப்பி, ட்யூனிகேட், பிற மீன்கள்
வாழிடம்: இந்திய கடல்பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தெரியுமா?
மெக்ஸிகோ, இந்தியா, நிகரகுவா, கோஸ்டா ரிகா நாட்டு கடற்புரங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
பேராமை (Green Turtle)
அறிவியல் பெயர்: செலோனியா மைடாஸ் (Chelonia mydas)
நீளம்: 120 செ.மீ.
எடை: 159 கி.கி.
உணவு: கடல் புற்கள், பாசி, ஜெல்லி மீன்
வாழிடம்: லட்சத்தீவுகள்
தெரியுமா?
பச்சை ஆமை, பிற ஆமைகளைப் போலன்றி தாவரங்களை முதன்மையாக உண்டு (Herbivorous) வாழ்கிற உயிரினம்
அழுங்கு ஆமை (Hawksbill turtle)
அறிவியல் பெயர் எரெட்மோசெலிஸ் இம்பிரிகாடா (Eretmochelys imbricata)
நீளம்: 91 செ.மீ.
எடை: 60 கி.கி.
உணவு: இறால், கடற்பாசி, கடல் தாவரமான அனிமோன்
வாழிடம்: அந்தமான் நிக்கோபார் தீவு, லட்சத்தீவுகள்.
தெரியுமா?
அழுங்கு ஆமையின் தலைப்பகுதி அமைந்துள்ள விதம், பறவைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.
பெருந்தலை ஆமை (Loggerhead turtle)
அறிவியல் பெயர்: கரெட்டா கரெட்டா (Caretta caretta)
நீளம்: 100 செ.மீ.
எடை: 159 கி.கி.
வாழிடம்: மன்னார் வளைகுடா
தெரியுமா?
பெருந்தலை ஆமை, பிற ஆமைகளை விட பெரிய தலையையும் வலிமையான தாடைகளையும் கொண்டது. இதன் காரணமாக, கடின ஓடுகளைக் கொண்ட கடல் உயிரினங்களை எளிதில் உடைத்து உண்கிறது.
sea turtles of india, mint
https://www.worldwildlife.org/species/loggerhead-turtle
https://www.hindutamil.in/news/supplements//9328-.html
https://www.seaturtlesofindia.org/about/species/loggerhead/
https://www.nwf.org/Educational-Resources/Wildlife-Guide/Reptiles/Sea-Turtles/Leatherback-Sea-Turtle
நன்றி: ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை!
கருத்துகள்
கருத்துரையிடுக