ஏழே நிமிடங்களில் உறங்குவது நல்லதா - உண்மையா, உடான்ஸா?

 











உண்மையா? உடான்ஸா? 

படுக்கையில் படுத்து ஏழே நிமிடங்களில் உறங்குவது இயல்பானது!

ரியல்

உண்மையல்ல. ஒருவர் இரவில் படுக்கையில் படுத்து 20 நிமிடங்கள் கழித்து உறக்கம் வருவது இயல்பானது. ஏழே நிமிடங்களில் தூக்கம் வரும் நிலையை, ஆல்பா ஸ்டேஜ் (Alpha Stage) என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆல்பா நிலையில் தான் பெருமளவு தியானம் செய்பவர்கள் இருப்பார்கள். படுக்கையில், 20 நிமிடங்களைக் கடந்தும் ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால், அவர் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.   

நெருப்புக்கோழியின் மூளையை விட அதன் கண்கள் பெரியவை!

ரியல்

உண்மை. பொதுவாகவே, பாலூட்டிகளை விட பறவைகளின் மூளை அளவு சிறியதுதான். பறவைகளில் பெரியது, நெருப்புக்கோழி. அதன் கண்களின் விட்ட அளவு,  5 செ.மீ.  ஏறத்தாழ பில்லியர்ட்ஸ் பந்தை ஒத்தது. நீளமான கண் இமைகளால் பாதுகாக்கப்படும் கண்களால்,  3 கி.மீ. தூரத்தில் உள்ள இரையை எளிதாக பார்க்க முடியும். இரவில், 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை அடையாளம் காண்கிறது. 

https://www.sleepadvisor.org/how-long-to-fall-asleep/

https://www.scifacts.net/animals/ostrich-eye-brain/

https://www.jagranjosh.com/articles/do-you-know-that-an-ostrichs-eye-is-bigger-than-its-brain-1458102253-1

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்