இடுகைகள்

அணுக்கமுதலாளித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...