இடுகைகள்

விவசாய மசோதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்! - நரேந்திரசிங் தோமர்

படம்
            நரேந்திரசிங் தோமர் விவசாயத்துறை அமைச்சர் பஞ்சாப் விவசாயிகள் குறைந்தபட்ச விலை கொள்முதல் வாக்குறுதியை வலியுறுத்தி வருகிறார்களே ? விவசாயிகள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை . குறைந்தபட்ச கொள்முதல் விலை திட்டம் அப்படியே தொடரும் . இதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி தர தயாராக உள்ளோம் . இதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை எப்படி அறிவிக்கப்போகிறது ? இன்றுவரை எங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை . அரசு அதனை நிர்வாகரீதியான முடிவாக அறிவிக்கும் . நீங்கள் இப்படி சொன்னாலும் கூட விவசாய சங்கங்களுக்கு உங்கள் அமைச்சரவை ஒரு கடிதத்தைக் கூட அனுப்பவில்லையே ? அப்புறம் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பீர்கள் ? நாங்கள் இப்போதே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் இருக்கிறோம் . அவர்களின் பல்வேறு கோரிக்கை அம்சங்களை பரிசீலித்து வருகிறோம் . இதில் எங்களுக்கு தெளிவு கிடைத்தால் அவர்களின் மாற்றங்களை சட்டத்தில் புகுத்தி மாற்றி அவர்களைப் பார்க்க அழைப்பு விடுப்போம் . அரசு

விவசாய மசோதாக்களை எதிர்த்து நாங்கள் மக்களோடுதான் நிற்போம்! ஹர்சிம்ரத்கௌர் பாதல்

படம்
        ஹர்சிம்ரத்கௌர் பாதல்     ஹர்சிம்ரத்கௌர் பாதல் முன்னாள் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் எதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து பதவியை ராஜினாமா செய்தீர்கள்? எனது கட்சியும் நானும் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று விவசாயத்துறை மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கிறோம். இவை விவசாயிகளுக்கு எதிர்ப்பானவை. அரசிடம் நான் என் தரப்பு வாதங்களை முன்வைத்தும் அவை பயன் தரவில்லை. அவை மக்களவையில் வெற்றி பெற்றுவிட்டன. வேறு வழியில்லாத நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். விவசாயிகளுக்கான முன்னுரிமையை  எங்களது கட்சி முதலில் இருந்தே அளித்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது நாங்கள் எங்களது கருத்தை ஜனநாயகப் பூர்வமாக முன்வைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடமும் எங்கள் மறுப்பை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தோம். இ்ப்போது விவசாயிகளுடன் இணைந்து மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறோம். மசோதா அங்கீகரிக்கப்படும்போது கேபினட்டில் இருந்ததாக கூறுகிறார்களே? நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் எங்கள் கட்சியின் ஆட்சேபங்க