இழந்த அலுவலக வேலையைப் பெற நாயகன் செய்யும் அதீத சோதனைகள்!
மிஸ்ஸம்மா நீலகண்டா சிவாஜி, லயா, பூமிகா தனியாக தொழில்நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடிய திறமை உள்ள நாயகன், நண்பர்களால் மோசடிக்கு உள்ளாக்கப்பட வேறு வழியின்றி ஒரு நிறுவனத்தில் கணக்காளனாக வேலை செய்கிறான். அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர், ஒருநாள் அவனது நிறுவனத்திற்கு வருகை தருகிறார் அப்போது, தனது வணிக திட்டங்களைக் கொடுத்து பொதுமேலாளர் பதவியைப் பெற நினைக்கிறான். இயக்குநரோ, அவனை பணிவிலக்கி, வினோதமாக சோதனைகளை செய்யச் சொல்கிறார். அதனால், நாயகனின் குடும்பவாழ்க்கை, தொழில்வாழ்க்கை என அனைத்துமே சிதைந்து போகிறது. உண்மையில் அந்த இயக்குநரின் நோக்கம் என்ன? நாயகனின் வணிக கனவு என்னவானது என்பதே மீதிக்கதை. படத்தில் வணிக ரீதியான கவர்ச்சிப் பாடல்கள் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி படத்தில் பூமிகா சாவ்லா சிறப்பாக நடித்திருக்கிறார். மிகச்சில பாத்திரங்கள்தான். கதையும் பெரிதாக எங்கும் நகரவில்லை. அதில் சுவாரசியம் சேர்க்கவே பல்வேறு சோதனைகள் என்பதை சேர்த்திருக்கிறார்கள். பூமிகா பாத்திரத்தை தொடக்கத்தில் எதிர்மறையாக தொடங்கி பிறகு நேர்மறையாக முடித்திருக்கிறார்கள். வினோத சோதனையில் நா...