இடுகைகள்

வான்வெளி பறவைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வான்வெளி பறவைகளே, சுதந்திரமாக பறந்து செல்லுங்கள்!

படம்
  வினோத் அண்ணனின் வீட்டில் கிடைத்த கையேடு. ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, கையேடு தயாரிப்பில் பங்களித்துள்ளது. இதை இரவல் வாங்கி மாணவர் இதழில் தொடரைத் தொடங்கினோம். இதன் வடிவம் இப்படி இருக்கலாம் என தலைமை வடிவமைப்பாளர்  ஐடியாக்களை சொன்னார். எளிமையாக புரியும்படி இருக்கவே சரி என அதற்கேற்ப பேசி தீர்மானித்து எழுத தொடங்கினோம்.  பறவைகள் பற்றிய தொடரில் பிரச்னை என்னவெனில் அதை எழுதுபவர்கள் மட்டுமல்ல தலைமை உதவி ஆசிரியராக உள்ளவருக்கும் அடிப்படையான அறிவு அவசியம். மாணவர் இதழில் அப்போது அப்பதவியில் இருந்தவர் கையாலாகாதவர். தாய் இதழில் அரசியல் கிசுகிசுக்களை எழுதி வந்த டவுசர் கூடார ஆள். தொடரை எழுதி முடித்தால் போதாது என அதை அவர் அருகில் நின்று வைவா கொடுக்கும்படி ஆயிற்று. தலைமை வடிவமைப்பாளர் அலுவலகத்தில் தினமும் சண்டை நடந்தால் நன்றாக இருக்கும் என வெளிப்படையாகவே கூறியவர். தன்னைத்தானே மாணவர் இதழ் ஆசிரியர் என நினைத்து அதிகாரம் செய்யத் தொடங்கினார். இவரும் டவுசர் பாயும் நண்பர்களானார்கள்.  பறவைகளைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை கவனிக்க வைக்கவேண்டுமென தொடங்கிய முயற்சியை, மேற்சொன்ன இருவரின் அநாகரிக கே