இடுகைகள்

நார்ச்சத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணமாக உ

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட