இடுகைகள்

பலகை விளையாட்டுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் பலகை விளையாட்டுகள்!

படம்
சமூகப்பிரச்னைகளைப் பேசும் விளையாட்டுகள்! செய்தி: தற்போது இளைஞர்களால் விரும்பி விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகள் சமூகப்பிரச்னைகளையும் கவனப்படுத்தி வருகின்றன. அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்த உதவுகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த ஃபீல்ட்ஸ் ஆஃப் வியூ (Fov) நிறுவனம், பலகை விளையாட்டுகளை(Board games) உருவாக்கி வருகிறது.இதில் குப்பைகள் பெருகுவது, பாலின பாகுபாடு, மக்கள் இடம்பெயர்வு ஆகிய சமூக பொருளாதாரப் பிரச்னைகள்  மையமாகி உள்ளன. இதில் ரப்பிஷ் எனும் விளையாட்டு, திடக்கழிவை நிர்வகிப்பவர்களாக நான்கு அல்லது ஆறுபேர் விளையாடும் ஆட்டம்.  இதில் கிடங்கு முழுக்க குப்பைகளாக நிறைந்தால் ஆட்டக்காரர்கள் தோற்றுவிட்டனர் என்று பொருள். இதில் விளையாடுபவர்கள் பணம், ஆட்கள், தகவல் என பல்வேறு விஷயங்களையும் பயன்படுத்தலாம். ”இந்த விளையாட்டு மக்கள் கழிவுகளை எப்படிக் கையாள்வது எனப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கினோம்” என்கிறார் ரப்பிஷ் விளையாட்டை உருவாக்கியவரான பரத் பாலவல்லி. இதில் மேட் டு ஆர்டர் எனும் விளையாட்டு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறது. மேற்