ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா
ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம் மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை...