இடுகைகள்

சங்கர் ராம்சந்தானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை நாயகர்கள் 2020- மாற்றங்கள் இங்கிருந்து தொடங்குகின்றன!

படம்
சிறந்த மருத்துவர் சங்கர் ராம்சந்தானி ஒடிசாவில் சம்பல்பூரிலுள்ள தொழுநோய் நோயாளிகள் அதிகம் உள்ள பகுதி புர்லா. இப்பகுதியை த த்து எடுத்து அங்குள்ள மக்களுக்கு கல்வியும், மருத்துவ உதவிகளையும் அளித்து வருகிறார் மருத்துவர் சங்கர் ராம் சந்தானி.  உங்கள் மருத்துவப்பணி கடந்து இப்படி ஏழைகளுக்கு உதவக்காரணம் என்ன என்று கேட்டதற்கு, சமூகத்திற்கு செய்யும் பிரதி உபகாரம் இது. என்னுடைய கடமையும் கூட என்று பேசுகிறார். இவை தவிர ஏழைகள் உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்தி உதவிகளை வழங்கி வருகிறார். சூழலியலாளர் சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்த திம்மக்கா, நாற்பது ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு சூழலியலை மேம்படுத்த உதவியுள்ளார். இப்பணிக்கு அவரின் கணவர் சிக்கய்யாவும் உதவி வருகிறார். தனது கிராமமான ஹூலிக்கில் தன் பணிகளை முதலில் செய்யத் தொடங்கினார். குழந்தை இல்லாத குறையை உறவுகள் சொல்லிக்காட்ட, தற்கொலை செய்யப்போனவரை மரக்கன்றுகள்தான் காப்பாற்றின. இதன் விளைவாக, இன்று 107 வயதிலும் நன்றாக இருக்கிறார். அவர் வைத்த ஆலமரங்கள் இன்று ஹூலிக்கிலும் குடூரிலும் நன்றாக வளர்ந்து விட்டன. “இயற்கைய