இடுகைகள்

காந்தியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

பத்ம விருதுகளைப் பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் - சிறு அறிமுகம்

படம்
  இந்தியாவில் உள்ள பத்ம விருதுகளுக்கு யாருடைய பெயரையும் யாரும் பரிந்துரைக்கலாம். இதற்கான குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றி அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டால் உள்துறை அமைச்சகம் இறுதிப்பட்டியலை வெளியிடும். விருதுகளை பெறுகிறவர்களை அமைச்சகம் போன் செய்து தகவல் தெரிவிக்கும். சிலர் அதனை ஏற்க மறுத்தால், அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களது பெயரை உள்துறை அமைச்சகம் விருதுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடும். இதுதான் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.  இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட சிலரைப் பற்றி படிக்கப் போகிறோம்.  கே வி ரபியா கே வி ரபியா 55 கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். கழுத்துக்கு கீழே உடல் இயக்கம் கிடையாது. இதனால் வீல்சேரில்தான் வாழ்கிறார். அப்படியிருந்தும் கூட பிறரைப் பற்றி யோசிக்கிறார் என்ற நோக்கில் விருதை அறிவித்திருக்கிறார்கள். பனிரெண்டு வயதில் போலியோ பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றைக் கேட்டு மனமொடிந்தவரின் உடலும் மெல்ல செயலிழந்து போனது. இதனால் அப்படியே கலங்கி நிற்காமல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முயன்று வருகிறார்