இடுகைகள்

டிவி தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்

படம்
  ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 தென்கொரிய டிவி தொடர் யூட்யூப் – எஸ்பிஎஸ் வேர்ல்ட் கொரியாவின் சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள் வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு போகும் சூழலில் இருக்கிறாள். காங்கிற்கு, அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி நடைமேடையில் நிற்கிறாள்.   கைவிரல்களை முயல்போலாக்கி நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான்.   விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான் விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும் அதேபோல அவன் சொன்ன

கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவும் பல்கலைக்கழக மாணவன்! டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி!

படம்
  டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி ஜப்பான் டிவி தொடர் சீசன் 1 இந்த டிவி தொடர் முழுக்க உளவியல் தொடர்பானது. குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவர் எப்படி உளவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார் என்பதை பல்வேறு வழக்குச் சம்பவங்கள் வழியாக விளக்குகிறது. அதிரடியான திருப்பங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என்று தொடரில் ஏதுமில்லை. அனைத்தும் நிதானமாக நடைபெறுகிறது. அதை பல்கலைக்கழக மாணவர் டோட்டனோ குன் கண்டுபிடிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் டோட்டனோ குன், சமூகத்தின் விதிகளுக்கு அதிகம் பொருந்தாத ஆள். அகவயமானவர் என்பதால், நூல்களை வாசிப்பது, பிடித்த உணவுகளை சமைத்து ரசித்து சாப்பிடுவது, ஓவியக் கண்காட்சிகளுக்கு செல்வது என வாழ்ந்து வருகிறார். அவருக்கு நண்பர்களே கிடையாது. பெண் தோழியும் இல்லை. இப்படி வாழ்பவர் வாழ்க்கையில் கொலை வழக்கு குற்றச்சாட்டு வருகிறது. ஒருநாள் தனது. அறையில் சமைத்து சாப்பிடத் தயாரானவரை காவல்துறையினர் வந்து அவரது பல்கலையில் படிக்கும் வசதியான மாணவரை கொலை செய்துவிட்ட குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். முறையான அரஸ்ட் வாரண்ட கூட கிடையாது. கூட்டிபோய் மிரட்டி அவரை குற்றவாளி என

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

தனது அப்பா சீரியல் கொலைகாரர் அல்ல என்று நிரூபிக்க போராடும் மகன்! தி கில்லர் இன்சைட் - ஜேடிராமா

படம்
  தி கில்லர் இன்சைட் - ஜே டிராமா தி கில்லர் இன்சைட் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்கொலைகாரர் எல்எல். டஜன் கொலைகளை செய்கிறார். காவல்துறை அவரை கைது செய்யும் முன்னரே, தற்கொலை செய்துகொள்கிறார். அத்தோடு அரசு அதிகாரிகள் அந்த பிரச்னையை முடித்துவிடச் சொல்கிறார்கள். வழக்கும் தீர்க்கப்படுகிறது. தற்போதைய காலத்தில் நகரில்   எல்எல் கொலைபாணியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொள்ளப்படுகிறார். இந்த கொலை விசாரணை தொடர்பாக,   தொடர் கொலைகாரரின் மகன் இஜி  (ரியோசுகே யமடா)  விசாரிக்கப்படுகிறார். இதனால், பல்கலைக்கழகத்தில் மாணவரான அவரின் அடையாளம் தெரிந்த   மாணவர்கள் அவரை கேலி அவதூறு செய்கின்றனர்.   இஜியைப் பொறுத்தவரையில், அவரது அப்பா, குற்றவாளி அல்ல என நம்புகிறார். நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை. அல்லது   தொடர்கொலைகாரர் எல்எல்லை   பிடிக்கவேண்டும். உண்மையில் இந்த முயற்சியில்தான் இஜி தனக்கு ஆளுமை பிறழ்வு குறைபாடு இருக்கிறது என்பதை தோழி மூலம் அறிகிறார்.   அதன் விளைவாக, தெரிய வரும் பி1 குன் என்ற பாத்திரம், முற்றிலும் வேறு ஆளுமையைக் கொண்டிருக

தங்க கண்களைக் கொண்டு காணாமல் போன தாத்தாவின் வரலாற்றைத் தேடும் பேரன் - கோல்டன் ஐஸ் - சீன டிவி தொடர்

படம்
  கோல்டன் ஐஸ் சீன டிவி தொடர் புனைவு, வரலாறு ராக்குட்டன் விக்கி 56 எபிசோடுகள் பெய்ஜிங் நகரில் உள்ள தொன்மை பொருட்கள் அடகுக் கடையில் ஜூவாங் ருய் வேலை செய்து வருகிறான்.  பெற்றோர்கள் இல்லை. சைக்கிளில் செல்வது, சமூக வலைத்தளத்தில் நண்பர்களுடன் சென்ற பார்ட்டிகளை பதிவிடுவது என அவனது வாழ்க்கையே அவ்வளவுதான். ஒருநாள் அவனது நண்பன் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீட்டுக்குப் போகாமல்  அடகுக்கடைக்கு ஏதோ பொருளை எடுப்பதற்காக வருகிறான். அந்த நேரத்தில் அவசரமாக வந்ததாலும் மது போதையிலும் கதை மூடாமல் உள்ளே வந்துவிடுகிறான். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளே புகுகிறது. அவர்கள் அங்கு ஒரு தொன்மையான பொருளை திருட வந்திருக்கிறார்கள். ஆனால் ஹூவாய் ருய் செய்த முட்டாள்தனமான காரியத்தால் பல்வேறு பொருட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு நொறுங்குகின்றன. அதில் தொன்மைப் பொருளின் சிறுபகுதி அவனின் கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு, காவல்துறை அந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரிக்கும் பெண் அதிகாரி ஃபெய்பெய் ஹூவாங் ருய்தான் திருட்டு கும்பலுக்கு உதவி செய்தானோ என்ற ரீதியில் விசாரிக்கிறார். இந்த

தனது உதவியாளரின் உடலுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் டாக்டர்! - கோஸ்ட் டாக்டர் -

படம்
  கோஸ்ட் டாக்டர் தென்கொரிய டிவி தொடர் 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர் பூ சியாங் சியோல் ( Boo Seong-cheol  ) டாக்டர் சா இயான் மிங் (Rain), ஆணவம் கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர். தான் கைவைத்து அறுவை சிகிச்சை செய்தால் அந்த நோயாளி பிழைக்கவேண்டும் என போராடும் மருத்துவர். அவரது துறையின் தலைமை மருத்துவர் பான் கூட சாவின் அர்ப்பணிப்பு உணர்வையும் அறுவை சிகிச்சை திறனையும் பார்த்து பொறாமைப்படுபவர். சா திறமையானவர் என்றாலும், தான் மட்டுமே அறுவை சிகிச்சைக்கான நோயாளியைத் தேர்ந்தெடுப்பேன் என பிடிவாதமாக இருப்பவர். இதனால் எமர்ஜென்சி பிரிவில் அவரது தேவை இருந்தாலும் அதை நான் செய்யமாட்டேன் என   பிடிவாதமாக இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையின் தலைவராக உள்ளவரின் பேரன் கோ தக் (kim bum), அங்கு வேலைக்கு வருகிறான். இதயநோய் துறைக்குத் தான் பயிற்சி பெற வருகிறான். சிபாரிசில் வந்தவன், மருத்துவமனை அவனுடையது என்பதால் எளிதாக வந்துவிட்டான் என மருத்துவர் சா அவனை அவமானப்படுத்தி பேசுகிறார். இழிவாக நடத்துகிறார். நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள சொல்லி தள்ளிவிடுகிறார். இத்தனைக்கும் மருத்துவ கல்

தனது காணாமல் போன மாமாவைக் கண்டுபிடிக்க உயிரைப் பணயம் வைக்கும் புலனாய்வாளர் ரீயூனியன் - சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ்

படம்
  ரீயூனியன் – தி சவுண்ட் ஆப் புரோவிடன்ஸ் சீன டிவி தொடர் 2020 -july to  august 32 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் இயக்குநர் பான் அன் ஸி வூ குடும்பம் கலைப்பொருட்களை சீன தொல்பொருள் துறையுடன் அகழ்ந்து எடுத்து அதை வியாபாரம் செய்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் வூசி இவன் தொல்பொருட்களை கண்டறிந்து புலனாய்வு செய்து மர்மத்தை கண்டறிபவன். இவன் எதிரிகளே இவனை சொல்லுவது போல கடவுளை நம்பாத நாத்திகன். கண்ணால் பார்ப்பது, அதிலிருந்து கற்றுக்கொள்வதை மட்டுமே நம்புவன். இவனது நண்பர்கள் குண்டு வாங், அதிரடி கைலன். இதில் வாங், பேசிக்கொண்டே இருப்பான். வூசி பேசுவது காரண காரியமாகத்தான். கைலன் பெரும்பாலும் பேசாத ஆள். தொடரில் அவனுக்கு வசனம் குறைவு. ஆனால் தன் இரு நண்பர்களுக்கு ஆபத்து வரும்போது யோசிக்கவே மாட்டான். எதிரிகளை மண்டை உடைத்து மாவிலக்கு ஏற்றிவிடும் தீரன். வூசியின் தாய்மாமாக்கள் மூவர். இதில் இரண்டாவது மாமா சொல்படி தான் வூசி கேட்டு நடக்கிறான். இவர்களுடையது பணக்கார குடும்பம். பெற்றோர் சிறுவயதில் இறந்துவிட்டதால் வூசியை இரண்டாவது, மூன்றாவது மாமா ஆகிய இருவரும்தான் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்ட