இடுகைகள்

மின்சார வேலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்