இடுகைகள்

நம்பியார். கலாசாரத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசத்தும் ஜப்பான் மலையாள அகராதி! - அரசு அதிகாரி சாதனை

படம்
Add caption பெருமை பேசும் உழைப்பு -  ஜப்பான் மலையாள அகராதி கொச்சியைச் சேர்ந்த கேபிபி நம்பியார், அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு ஜப்பான் மலையாள அகராதியை தொகுத்துள்ளார். ஆறு லட்சம் வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதி, பதினைந்து ஆண்டுகள் உழைப்பில் தயாரானது. இதிலுள்ள மலையாள வார்த்தைகளின் எண்ணிக்கை 53000. அனைத்து வார்த்தைகளையும் கையில் எழுதியிருக்கிறார் மனிதர். மொத்தம் கையெழுத்தி பிரதியாக 3 ஆயிரம் பக்கங்கள் வந்திருக்கிறது. எழுதியவுடன் அதனைப் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களை நாடியுள்ளார். ஆனால் ஜப்பான் எழுத்துரு யாரிடமும் இல்லை என்பதால் உடனே நிராகரித்துள்ளனர். உடனே ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றவர், டோக்கியோ அயல் உறவுகள் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினார். அங்கு மொழி சார்ந்த மென்பொருளை பேராசிரியர்கள் ஜூன் தகாசிமா, மகாடோ மினேகிஷி ஆகியோர் உருவாக்கி உதவினர். அப்போதுதான் நம்பியார் செய்த தவறு ஒன்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பான் - மலையாள அகராதிக்கு அவர் பயன்படுத்திய ஜப்பான் அகராதி அறுபது ஆண்டுகள் பழமையானது. உடனே தினசரி ஏழு மணிநேரம் உழைத்து, அக