இடுகைகள்

அறிவியல் உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுநீர், மலத்தின் மூலம் உடல்நிலையை கணிக்க முடியும்! அமெரிக்க ஆய்வில் தகவல்

படம்
ஜிபி உடல்நிலையைக் கணிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கழிவறையில் ஸ்மார்ட் பொருட்களை பொருத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு சிறுநீரகம் மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளனர். இந்த கழிவறையின் பெயர் ஐபிலாப் ஆகும். நாம் காந்தியைப் போல சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை அவ்வளவு கவனமாக பார்ப்பதில்லை. இந்த ஸ்மார்ட் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கேட்ஜெட்ஸ் மூலம் சிறுநீரின் அளவு, அதிலுள்ள கழிவுப்பொருட்களின் தன்மை ஆகியவற்றை அளவிட்டு புற்றுநோய் வாய்ப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொற்றுநோய்கள் வரையில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மருத்துவர் சஞ்சீவ் காம்பீர் குழுவினரின் முயற்சியில் இந்த கழிப்பறை தயாரிக்கப்பட்டு 21 தன்னார்வலர்களைக் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை நேச்சர் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் இதழில் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் இம்முறையில் மனிதர்களின் நோய்களை குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடி

ஆல் இன் ஆல் அறிவியல்!

படம்
சீனா ஜெயிக்க காரணம் என்ன ? 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 264 பில்லியன் டாலர்கள் எனில் சீனாவின் ஏற்றுமதி 2,098 பில்லியன் டாலர்கள் . இந்தியச்சந்தையை சீனர்கள் எப்படி வளைத்தார்கள் என்பதை பார்ப்போம் . மெகா தயாரிப்பு : இந்தியர்கள் இரண்டு மெஷின்களில் குடம் செய்கிறார்கள் என்றால் சீனாவில் 70 மெஷின்கள் அதை செய்கின்றன . பணியாட்களின் உற்பத்தித் திறன் 5 மடங்கு அதிகம் . நூறு பணியாளர்களை பணியில் அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்டங்களின் குறுக்கீடு இங்கு அதிகம் . ஊழலும் போக்குவரத்தும் : ஊழல் பட்டியல் 2016 படி 176 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் 76 இடம் வகித்தாலும் தினசரி வாழ்வில் சீனர்களுக்கு ஊழல் குறுக்கீடு குறைவு . மேலும் யூனியன்களின் வரைமுறையற்ற ஸ்ட்ரைக் தொல்லைகள் சீனாவில் குறைவு . மும்பை - டெல்லி தூரத்தைவிட சீனாவின் குவாங்சூவிலிருந்து மும்பை 5 மடங்கு தூரம் அதிகம் . ஒரு கன்டெய்னருக்கு ஆயிரம் டாலர் செலவெனில் , ஒரு சிலைக்கு 4 சென்ட்ஸ் . இதோடு தடையற்ற மின்சாரம் , அரசு மானியங்கள் ஆகியவையும் சீனா சந்தையில் ஜெயிக்க உதவி

அறிவியல் பக்கங்கள்!

படம்
ஆஸ்திரியாவின் புதிய தலைவர் ! செபாஸ்டியன் கர்ஸ் ஆஸ்திரியாவை ஆளும் தகுதிகொண்ட இளம் தலைவராகி உள்ளார் . ஆஸ்திரிய தேர்தலில் 30% வாக்குகளைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சித்தலைவரான (OVP) செபாஸ்டியன் , 27 வயதில் வெளியுறவு அமைச்சராக ( ஐரோப்பாவிலேயே இளம்வயது ) நியமிக்கப்பட்டார் . அமெரிக்கா , சீனா , ரஷ்யா , ஜெர்மனி , ஃபிரான்ஸ் , இங்கிலாந்து , வியன்னா உள்ளிட்ட நாடுகளோடு அணுஉலை டீலிங்குகளை கச்சிதமாக பேசி முடித்த சாமர்த்தியசாலி . மசூதிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி , இஸ்லாமியர்கள் பொதுஇடத்தில் பர்கா அணிவது ஆகியவற்றுக்கு தடா போட்டு ஜெர்மனிய மொழியில் குரான் ஓதச்சொன்ன வலதுசாரி மனிதர் செபாஸ்டியன் . ஆஸ்திரியாவில் ஐந்து ஆண்டுகள் வசிக்காத அகதிகளுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என்று சொன்ன பெரிய மனசுக்காரர் 2016 ஆம் ஆண்டு அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் பால்கன் வழியை மூடிய இரும்பு நெஞ்சுக்காரரான செபாஸ்டியனை அதிகார பசி கொண்ட நியோலிபரல் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள் . 2 தொட்டால் உணரும் பாக்டீரியா ! நரம்புகளின் அமைப்பே இல்லாத பாக்டீரியாவுக்கு தொடும் உணர்வு உள்ளதாக ஆராய்ச்சியாள

அறிவியல் நியூஸ்!

படம்
வாட்டர் பாட்டில் கட்டிடம் ! கான்க்ரீட்டில் கட்டப்படும் கட்டிடங்களை இன்னும் ஸ்ட்ராங்காக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . 20% வலு கூடும் என்கிறது ஆராய்ச்சி தகவல் . பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்வதால் 4.5% கார்பன் வெளியீடும் குறையும் என்பது கூடுதல் பிளஸ் . " சிமெண்டில் கலக்கப்படும் பிளாஸ்டிக் அளவு குறித்து கவனித்து வருகிறோம் . சரியான முடிவை அறிய சிமெண்ட் மிக்சர் அளவை கச்சிதாக உருவாக்குவது அவசியம் " என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த குணால் கப்வாடே பாடீல் . ஒளியை பிரதிபலிக்கும் தன்மை பிளாஸ்டிக்கில் இருப்பதால் காமா கதிர்வீச்சு அபாயம் பற்றி சர்ச்சை எழுந்தது . " இந்த வகை பிளாஸ்டிக்கில் கதிர்வீச்சு உருவாக பெரிய வாய்ப்பில்லை " என்கிறார் எம்ஐடியின் அணு பொறியியல் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஷார்ட் . 2 தொழிற்சாலைகளை மூடிய சீனா ! சீனாவின் காற்றுமாசுபாடு உலகறிந்த பிரச்னை என்பதால் உடனடியாக அதை சரிசெய்ய அரசு களமிறங்கியுள்ளது . " தற்போது ஃபேக்டரிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் இன்ஸ்பெக்சன் சென