சிறுநீர், மலத்தின் மூலம் உடல்நிலையை கணிக்க முடியும்! அமெரிக்க ஆய்வில் தகவல்






Viber tamil sri lanka viber GIF
ஜிபி



உடல்நிலையைக் கணிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கழிவறையில் ஸ்மார்ட் பொருட்களை பொருத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு சிறுநீரகம் மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளனர். இந்த கழிவறையின் பெயர் ஐபிலாப் ஆகும்.

நாம் காந்தியைப் போல சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை அவ்வளவு கவனமாக பார்ப்பதில்லை. இந்த ஸ்மார்ட் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கேட்ஜெட்ஸ் மூலம் சிறுநீரின் அளவு, அதிலுள்ள கழிவுப்பொருட்களின் தன்மை ஆகியவற்றை அளவிட்டு புற்றுநோய் வாய்ப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொற்றுநோய்கள் வரையில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மருத்துவர் சஞ்சீவ் காம்பீர் குழுவினரின் முயற்சியில் இந்த கழிப்பறை தயாரிக்கப்பட்டு 21 தன்னார்வலர்களைக் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை நேச்சர் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் இதழில் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் இம்முறையில் மனிதர்களின் நோய்களை குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். நாங்கள் இந்த அமைப்பின் முடிவுகளை துல்லியமாக்க முயன்று வருகிறோம் என்கிறார் டாக்டர் சஞ்சீவ் காம்பீர்.

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்