காதலா, நட்பா குழப்பத்தில் பயணிக்கும் சொந்தக்காரப் பையன்! - சுட்டாலப்பாயி 2016







Aadi - Veerabhadram's 'Chuttalabbayi' Releasing On August 5th ...
தெலுங்கு பன்ச்



சுட்டாலப்பாயி

ஆதி, நமீதா பிரமோத்

இயக்கம்: வீரபத்ரம் சௌத்ரி

ஒளிப்பதிவு: எஸ். அருண்குமார்

இசை: எஸ். தமன்

போலீஸ் கமிஷனரின் தங்கை காவ்யா, அண்ணனின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காமல் தன் தோழியுடன் உதவியுடன் வீட்டை விட்டு ஓடுகிறாள். அப்போது அவளால் பாதிக்கப்பட்டு அவளது அண்ணனின் கோபத்திற்கு ஆளாகும் பாப்ஜி, மன்னிப்பு கேட்க அங்கு வருகிறான். ஆனால் சூழ்நிலை சிக்கலால், காவ்யாவின் அண்ணன் பாப்ஜிதான் தன் தங்கையை கூட்டிக்கொண்டு செல்கிறான் என இரண்டாவது முறையும் தவறாக புரிந்துகொண்டு அவர்களைப் பிடிக்க போலீஸ் படையை ஏவுகிறார். இருவரும் போலீசில் சிக்கினார்களா? பிரச்னை இல்லாமல் நினைத்த இடங்களுக்கு சென்றார்களா? பாப்ஜி உண்மையில் காவ்யாவை காதலிக்கவில்லையா என்பதுதான் மீதிக்கதை.

ஆஹா

ஆதி முதல் காட்சியில் ஆச்சரியப்படுத்தினாலும் அதற்குப்பிறகு வரும் காட்சிகளில் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாடல்கள் வரும்போது மட்டும் துடிப்பாக இருக்கிறார். நமீதா பிரமோத துள்ளலாக நடித்து நடனமாடியிருக்கிறார். பாச அண்ணன் தங்கை கேட்டால் எதற்கு மறுக்க போகிறார்? திடீரென அவர் வீட்டை விட்டு ஓடுவது பொருந்தவில்லை. தமன் போட்டுக்கொடுத்த பாடல்களை பயன்படுத்தவேண்டுமே? தமன் பாடல்கள் மூலம் உற்சாகப்படுத்த நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.

ஐயையோ

ரயிலில் செல்லும் காட்சிகள், அங்கே ரவுடிகள் துரத்துவது, போலீஸ் ஜீப்பில் துரத்துவது ஒரு கட்டத்தில் நமக்கே இளைப்பாறலாம் என்று தோன்றுகிறது. நடிகர்களும் அதையே முகத்தில் உணர்ச்சிகளாக பிரதிபலிக்கிறார்கள். நகரத்தில் இருக்கும்போது உற்சாக இருந்த படம் கிராமத்திற்குள் நுழைந்தவுடன் அமைதியாகி படுத்துவிடுகிறது.

உற்சாகம் குறைந்த சொந்தக்காரப் பையன்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்