கர்ச்சீஃபை விட டிஷ்யூ தாள்களே சிறந்தவை! - மிஸ்டர் ரோனி பதில்கள்













மிஸ்டர் ரோனிsad this is us GIF by Twitter

விலங்குகளின் கண்மணி மாறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்?

விலங்குகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. எனவே அதற்கேற்ப அதன் கண்கள் இரையைப் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாம்புகளுக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் இதே போன்ற கண் அமைப்புகள் உண்டு. யார் விழிப்புணர்வாக இருக்கிறாரோ அவரே இந்த திறன் மூலம் வெல்வார். வென்றால் உலகில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். மனிதர்களின் கண்களில் இருக்கும் தசைகளை விட கூடுதலாக தசைகள் இதற்கு தேவைப்படுகின்றன. விலங்குகள் அதனால்தான் சிறப்பாக வேட்டையாட முடிகின்றது.

தூங்கும்போது கனவில்தான் கிரியேட்டிவிட்டியான விஷயங்கள் கிடைக்குமா?

பொதுவாக முக்கியமான கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் சாதனைகள் பற்றி பேசும்போது இப்படி சொல்லியிருக்க கூடும். கனவுகளில் வரும் விஷயங்களுக்கு பொதுவாக லாஜிக் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் லாஜிக்கோடு பொருத்தி யோசித்தால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. எழுவதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட ஹிப்னோஜோகிக் நிலையில்தான் பெரும்பாலும் கிரியேட்டிவிட்டி மடை உடைத்து பாய்கிறது.  ஃபிராங்கன்ஸ்டைன் நாவல் எழுதிய மேரி ஷெல்லி கூட  இந்த நிலையில்தான் நாவலுக்கான ஐடியா கிடைத்ததாக சொல்லியிருக்கிறநார். எனவே நீங்களும் பேப்பரும், பேனாவுமாக தூங்கச்செல்லுங்கள். ஐடியாக்களை குறித்து வைத்து உலகை வெல்லுங்கள்.

கர்ச்சீஃப் நல்லதா, டிஷ்யூ தாள்கள் நல்லதா?

கர்ச்சீஃப் பாதுகாப்பானது என்று சொல்லமுடியாது. மூக்கை சிந்திவிட்டு துடைப்பது, தும்மலின் எச்சிலைத் துடைப்பது, நித்தியாமிர்த லன்சை முடித்து கையைக் கழுவிட்டு கர்ச்சீஃப்பில் துடைப்பது என கிருமிகள் இட ஒதுக்கீட்டில் அதில் இடம்பெற வாய்ப்பளிக்கிறோம். இதைவிட டிஷ்யூ தாள்கள் ஆபத்து குறைந்தவை. பாக்டீரியாக்கள் ஈரமான நிலையில் அதிகம் வளருவதற்கு வாய்ப்புள்ளது. இதில் கர்ச்சீஃப் அதற்கு இடமளிக்கிறது.


கருத்துகள்