நண்பனின் அறிவுரையால் படுகுழியில் விழும் காதல்! - கீதகோவிந்தம்




Vijay-Devarakonda | Tamil actors Wallpapers | Tamil Movie news ...



கீத கோவிந்தம்

இயக்கம்: பரசுராம்

இசை: கோபிசுந்தர்

விஜய் கோவிந்த் ஹைதராபாத்தில் வசிக்கிறான். அங்கு கோவிலில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். வாழ்க்கையை அவளோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும் என நினைக்கிறான். அப்போது அவனது தங்கைக்கு திருமண சம்பந்தம் கூடி வருகிறது. அதற்காக ஊருக்கு செல்கிறான். பஸ்ஸில் போகும்போது அவன் கோவிலில் சந்தித்த பெண் கீதாவைச் சந்திக்கிறான். ஆனால் அப்பயணத்தில் நேரும் சிறு தவறு அவனது தங்கையின் திருமணம், அவனது அப்பாவின் உயிர் ஆகிய இரண்டையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. எப்படி அதிலிருந்து விஜய் கோவிந்த மீண்டான் என்பதே கதை.

ஆஹா

படம் முழுக்க நம்மை ஆச்சரியப்படுத்துவது விஜய் தேவரகொண்டாவின் நடிப்புதான். சிறப்பாக நடித்திருக்கிறார். தான் செய்த தவறு, காதலிக்கும் பெண்ணிடம் கூட காதலைச்சொல்ல முடியாதபடி எப்படி வாழ்க்கையை இடியாப்பச்சிக்கலாக்குகிறது என்பதை உடல்மொழியில் காட்டியிருக்கிறார். ராஷ்மி மந்தனா படம் முழுக்க வெறுப்பைக் காட்டும் கதாபாத்திரம். இவருக்கு பெரிய ஸ்கோப் ஒன்றுமில்லை. நண்பராக வரும் ராகுல் ராமகிருஷ்ணா சரக்கு அடித்துவிட்டு கொடுக்கும் யோசனைதான் படத்தின் முக்கிய திருப்புமுனை. இவர் செய்யும் கிளைமேக்ஸ் டிவிஸ்டும் அதிரடிக்கிறது. கொஞ்சநேரமே வந்தாலும் வெண்ணிலாகிஷோர் கவனிக்க வைக்கிறார்.

ஐயையோ

கீதா, தனக்கு விஜய் கோவிந்த் செய்த விஷயங்களை நினைத்து பழிவாங்குகிறார் என்பது வரையில் சரி. ஆனால் எப்போதும் வெறுப்பையே காண்பிப்பவர் திடீரென காதலிக்கிறார் என்கிறார்கள். அதற்கான குறைந்தபட்ச அடையாளங்களைக் கூட விஜய் கோவிந்தும் சரி பார்வையாளர்களான நாமும் பார்ப்பதில்லை. சிடுமூஞ்சியாக இருக்கும் கீதா, மனைவியானால் வாழ்நாள் முழுக்க பயமும் பதற்றமுமாக இருக்கவேண்டும் என விஜய் நினைப்பதில் தவறு என்ன இருக்கிறது? பெண்களைப் புரிந்துகொள்ளுங்கள் என்பது போல வைத்திருக்கும் காட்சிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வரும் பெண்களைப் பிடித்த ஆண்கள் கட்டுரைகளை பிரதி எடுத்தாற் போல இருக்கிறது. கோபிசுந்தரின் இசையும், ஒளிப்பதிவும் படத்தின் குறைகளிலிருந்து காப்பாற்றுகிறது.

பெண்கள் வேற்றுகிரகவாசிகள்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்