வன விலங்குகளை அழியாமல் காத்தால்தான் நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்! புகைப்படக்காரர் ஜோயல் சர்தோர்
வனவிலங்கு புகைப்படக்காரர் ஜோயல் சர்தோர்
நேஷனல்
ஜியோகிராபிக் போட்டோ ஆர்க் திட்டத்திற்காக 25 ஆண்டுகளாக அழிந்து வரும் வனவிலங்குகளைப்
பற்றி புகைப்படங்களை எடுத்து தொகுத்து வருகிறார். வனவிலங்குகளை பாதுகாக்கவேண்டியதன்
அவசியம், தனது முக்கியமான புகைப்படத் தருணங்கள், விலங்குகளிடம் மனிதர்கள் கற்கவேண்டிய
விஷயங்கள் என பலவற்றையும் நம்மிடம் பேசினார்.
நன்றி:
டைம் எவோக்
ஆங்கிலத்தில்:
ஸ்ரீஜனா மித்ரா தாஸ்
நீங்கள் புகைப்படம் பிடித்த விலங்குகளிடமிருந்து
என்ன விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?
மூளையை
எப்படி தன்னுடைய வாழ்க்கைக்காக பயன்படுத்துவது என்பதை மிகவும் நுட்பமாக இந்த விலங்குகள்
தெரிந்து வைத்துள்ளன. சத்தம் எழுப்பாமல் பறக்கும் ஆந்தை, நிறமாற்றம் கொள்ளும் பச்சோந்தி,
அனைவரோடும் இணைந்து பணியாற்றும் எறும்புகள் என நாம் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய
உள்ளன. புகைப்படங்கள் எடுப்பது என்பது தினசரி பள்ளி சென்று பாடம் கற்பது போன்றுதான்
இருந்தது.
25 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கி வருகிறீர்கள்.
அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?
மக்கள்
இன்று என் புகைப்படங்களைப் பார்த்து வனவிலங்குகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டிருப்பது
மகிழ்ச்சி. ஆனால் இதோடு நாம் நின்றுவிட முடியாது. நமக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளன.
இப்போது பத்தாயிரம் உயிரிகளை நான் ஆவணப்படுத்தியுள்ளேன். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும்
ஆவணப்படுத்த முயன்று வருகிறேன். அடுத்து பதினைந்தாயிரம் என்ற இலக்கைத் தொட நினைக்கிறேன்.
உங்களது பத்தாயிரமாவது புகைப்படமாக அமைந்த
உயிரினம் கழுதைப்புலி. இந்த சம்பவத்தை விவரியுங்கள்.
இந்த
கழுதைப்புலியை பிறந்த பத்தாவது நாட்களிலிருந்து வனவிலங்கு காட்சியகத்தில் வளர்த்து
வருகிறார்கள். எனவே அவன் எளிதாக எங்களுடன் பழகினான். இரண்டரை வயதாகும் அவன் அதற்குப்
பிறகு காட்டுக்குச் செல்லவில்லை. கழுதைப்புலிகள் எழுப்பும் ஒலி மனிதர்களின் சிரிப்பொலி
போன்று இருக்கும். அவன் தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்த மியாவ் என்று கத்திக்கொண்டு
வருவது எனக்கு பிடித்த விஷயம்.
கூச்ச சுபாவம் கொண்ட கழுதைப்புலிகள்
ஐயுசிஎன் பட்டியலில் அழியும் உயிரினங்களில் ஒன்றாக எப்படி அடையாளப்படுத்தப்பட்டது?
எலிகளைக்
கட்டுப்படுத்துவதில் கழுதைப்புலிகளுக்கு நிகர் எந்த விலங்குகளுமில்லை. ஆனால். விவசாயிகள்
தங்கள் வீட்டு கோழிகளை கழுதைப்புலி கொன்றுவிடும் என நினைத்து அதனை சுட்டுக்கொன்று வருகின்றனர்.
கோவிட் -19 நோய்த்தொற்று மனிதர்களுக்கு
சூழல், விலங்குகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக நினைக்கிறீர்களா1?
இது
உண்மையிலே எச்சரிக்கை அலாரம்தான். இயற்கையை அழித்து வந்த மனிதர்கள் இனிமேல் கவனமாக
இருப்பது அவசியம். விலங்குகளின் உடலிலுள்ள வைரஸ், மனிதர்களின் தொடர்பால் அவர்களைத்
தாக்குகிறது. வனவிலங்குகளைக் கொன்று இறைச்சியை விற்கும் சந்தைகள் இனி நடைபெறக்கூடாது.
கோவிட் -19 நோய்த்தொற்று முதன்முதலில் இதுபோன்ற சந்தைகள் வழியாகவே வேகமாக பரவியது.
உலகம் இன்று ஒன்றொடொன்று கலந்துள்ளது. வனவிலங்குகளை அழியாமல் காப்பது என்பது நம்மை
நாமே காத்துக்கொள்வதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக