ஐஏஎஸ் பதவியில் சாதித்த சாதனைகளும், சிக்கல்களும் - ப.ஸ்ரீ. இராகவன்










நேரு முதல் நேற்று வரை / Nehru Muthal Netru Varai ...

நேரு முதல் நேற்று வரை 

ராகவன் 

கிழக்கு பதிப்பகம்


சுதந்திரமடைந்த இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகவன், தனது பணி அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார். வெறும் விருப்பு வெறுப்பு மட்டுமன்றி, எதிர்கால குடிமைப்பணித் தேர்வு எழுதும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இறுதிப்பகுதியிலும் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தலைநகரான டில்லியில் பணியாற்றுவதற்காக ஆங்கிலத்தோடு இந்தியும் கற்றது தனக்கு எப்படி பயன்பட்டது என்பதை லால் பகதூர் சாஸ்திரியோடு பணியாற்றிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். இதை சொல்லும்போதும், பல்வேறு நிகழ்வுகளின்போதும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமின்றி அரசியலுக்காக இடம் மாற்றுதல் செய்யப்படுவதை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார். 


இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள அரசு தலையீடூ  என புரிந்துகொண்டு நாம் வாசித்து கடந்துவிடலாம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஜோதிபாசு என பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழகிய அனுபவங்களை நேர்த்தியாக தொகுத்து எழுதியுள்ளார். கொல்கத்தாவில் செய்த வளர்ச்சிப் பணிகள், அதற்கு நேர்ந்த அரசியல் தலையீடுகள், ஊழல் பணியில் மூழ்கிய திரிபுராவில் உள்ள அணையை வெற்றிகரமாக கட்டி முடித்தது என ராகவன் செய்த பணிகள் பிரமிப்பு தருவன. 

நூலாசிரியரின் நேர்மைக்கு சான்றாக, அரசுப்பணியிலிருந்து விலகிய பிறகு நமக்கு ஏற்படும் சிக்கல்கள், குடும்பம் எவ்வளவு முக்கியம் என்று தான் அடையாளம் கண்டுகொண்டது என சில நெகிழ்ச்சியான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். 

அன்று முதல் இன்றுவரை ஐஏஎஸ் பணியிலுள்ள என்னென்ன அம்சங்கள் மாறியிருக்கின்றன, அதன் விளைவுகள் என பலவற்றையும் பேசியுள்ள விதத்தில் முக்கியமான நூலாகிறது. 

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்