இந்தியர்கள் ஏழையாக வாழ்ந்தே சுகம் கண்டுவிட்டார்கள் - சேட்டன் பகத்


Half of India's children are poor
dte



இந்தியர்கள் ஏழையாக இருப்பதிலேயே சுகம் கண்டுவிட்டனர்

சேட்டன் பகத்

உலகில் வேறு நாடுகளைவிட ஊரடங்கு காலம் இந்தியர்களை கடுமையாக பாதித்துள்ளது. உலகப்போர் கால புகைப்படங்கள் என்றால் உங்களுக்கு சில அடையாளமான புகைப்படங்கள் நினைவுக்கு வரும். இனி கொரோனா கால பாதிப்பு என்றால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் ஆதரவற்று நடந்துசெல்லும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். இந்திய அரசு இக்காலகட்டத்தில் அறிவித்த இழப்பீட்டுத்தொகை உள்நாட்டு உற்பத்தியில் குறைவான தொகையாகும். பிறநாடுகளை விட இது குறைவான தொகை என்பது உண்மை. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? பசியில் வீடு சொல்ல காத்திருக்கும், போராடும் மக்களை காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் விரட்டி வருகிறது. ஏன் அரசு இந்த நிலையை சமாளிக்க முடியவில்லை. இதற்கு பதிலாக கொரோனா பாதிப்பிற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என செய்தியை அரசுக்கு ஆதரவான குழுக்கள் பரப்பி வருகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம், நாம் ஏழை நாடு என்பதுதான். நாம் கேட்க விரும்பாத நிஜம் இதுவே.

நாம் வரலாற்று பெருமை கொண்ட நாடு, தங்கள் நாட்டை மக்கள் நேசிக்கின்றனர் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனால் நம்நாடு ஏழை நாடு. அரசிடம் செலவழிக்க பணம் இல்லை. எனவே நாம் இக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு எளிய காரணமாக கொரோனா கிடைத்துள்ளது. அனைவரும் இதுதான் நம் இந்தியாவின் ஒரே பிரச்னை என்று புகார் சொல்லி வருகிறோம். ஆனால் அது உண்மையா?

நாம் சுதந்திரம் பெற்ற ஆண்டுகளிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்தாலும் நம்மால் இன்னும் வறுமை பிடியிலிருந்து விலக முடியவில்லை. இப்போது சோசலிசம் வந்தால் இந்தியா பூவாக மலர்ந்து மணம் வீசும் என்று சிலர் பேசி வருகின்றனர். ஆனால் பிரச்னை அதுவல்ல. நாம் இன்றைக்கு வரை வளர்ச்சிக்கான செயல்பாடுகளை முடுக்கவில்லை. அனைத்தையும் குறிப்பிட்ட அடையாளத்தில் அடைத்து அரசியல் செய்து வருகிறோம். பிறகு எப்படி இந்தியாவின் முக்கிய பிரச்னையான வறுமையை அடையாளம் காண முடியும்? இந்தியாவின் வறுமைக்கு என்ன காரணம் என தொழிலதிபர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் வறுமைக்கு காரணம் அதில் சொகுசாக நாம் வாழ்ந்து பழகி விட்டோம் என்று கூறினார்.

அரசு எந்த கொள்கை வகுத்தாலும் அதனை செயல்பாட்டுக்கு வராதபடி தடுப்பது மக்களின் மனதிலுள்ள பல்வேறு மூட நம்பிக்கைகள்தான். இந்தியர்கள் தங்கள் மனதில் எது சரி, எது தவறு என்று வகுத்து வைத்திருக்கிற கொள்கைகள்தான் அவர்களின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தடையாக அமைந்துள்ளன.

இந்தியாவில் என்னென்ன மூடநம்பிக்கைகள் இருக்கின்றன என்று பார்ப்போம். பணத்தைத் தேடி போவது, சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது தவறு. யார் அப்படி பணத்தை தேடி பயணிக்கிறார்களோ அவர்கள் மோசமானவர்கள். வசதியான வளங்கள் நிரம்பிய வாழ்க்கையை வாழ்பவர்கள் நல்லவர்கள் அல்ல. புதிய ஆடைகள், நவீன போன்கள், போக்குவரத்து வாகனங்களை வாங்குபவர்கள் தவறானவர்கள். வைன், பீர் ஆகியவற்றை பருகும் பணக்காரர்கள் கருப்பு பணத்தை வைத்துள்ள தேச துரோகிகள். இப்படித்தான் இந்தியர்களின் மனநிலை உள்ளது. இதன் காரணமாக, இவர்களின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. இவையெல்லாம் மோசமானவை என்றால் எது நல்லது. மேற்சொன்னதற்கு எல்லாம் எதிர்மறையான விஷயங்கள். எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும். குறிப்பாக ஏழையாக இருக்கவேண்டும். குடும்பத்தில் மூத்தவர்களின் காலாவதியான சிந்தனைகளை காது கொடுத்து கேட்டு செயல்படுத்த வேண்டும். மத, சாதி தலைவரை கடவுளாக வழிபடவேண்டும். அரசு அனைத்து தொழில்களையும் நடத்த வேண்டும். தனியார் துறை என்பது ஊழல் நிரம்பியது. அவர்களால் நாடு கீழே சென்றுவிடும் என்பதே இவர்களது நம்பிக்கை. மதம் மற்றும் அரசியல் தலைவர்களை அப்படியே கடவுளாக நம்பி வழிபடுவார்கள்.

 

இந்த மனநிலை, மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் எப்படி நாட்டை வளர்ச்சிப்பாதையில் நடக்கவிடுவார்கள். இவர்களும் வளரமாட்டார்கள். அரசு தொழில்துறை வளர்ச்சியையும் இந்து முஸ்லீம் பாகுபாடு காட்டி கலவரத்தைத் தூண்டி அழிப்பார்கள்.

ஊரடங்கு காலம் நமக்கு நம்பிக்கையை தந்துள்ளது. நாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து பார்த்து திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு எப்போதும் வணிகத்தை நிறுத்த முயலக்கூடாது. தான் பணக்காரனாக வேண்டும் என்று ஒருவன் நினைப்பதில் தவறு என்ன இருக்கிறது? அரசு தொழில்துறையை நிறுத்தியதால் லட்சக்கணக்கானோர் சாலையில் பசியோடு அவலமான நிலையில் நடந்து செல்ல நேரிட்டது.. அரசின் வணிகத்தை நிறுத்தும் முயற்சி, உள்நாட்டு தொழில்களையும்  வெளிநாட்டு முதலீடுகளையும் பாதித்துவிட்டது. இம்முறையில் நாடு வளர்ச்சி பெறமுடியாது. முதலீடுகளில் தேவையின்றி விதிகளை இறுக்குவதும அவசியமில்லை.

இந்தியா பால்வெளியில் நடுவில் இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி அல்ல. இந்தியா இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் எப்போதும் போல செயல்பட்டுக்கொண்டிருக்கும். உலகின் வணிகம் எப்போதும் போல நடக்கும். இதில் இந்தியாவின் பங்கு உள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி. நாம் இந்த நேரத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும்தான் முயல வேண்டுமே தவிர இந்தியாவில் தயாரிப்போம், தனிச்சிறப்பான இந்தியா என்று விளம்பரம் செய்து கொண்டிருக்க கூடாது.

நம்மிடம் பணம் இல்லை அதனால் நம்மால் கொரோனாவை சமாளிக்க முடியவில்லை என்பது உண்மை. அதற்காக நாம் அப்படியே இருந்துவிடக்கூடாது.. பணம் என்பதே வாழ்க்கை கிடையாது. ஆனால் வாழ்க்கையில் அதற்கு பொருளியல்ரீதியாக முக்கியத்துவம் இருக்கிறது. இது தனிநபருக்கும் பொருந்தும், நாம் வாழும் நாட்டிற்கும் பொருந்தும்.

கொரோனாவுக்கு பிறகு நம் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்கிறீர்கள். நாம் இப்போது பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். ஏறத்தாழ நாற்பது நாட்களாக எந்த பொருளாதார உற்பத்தியும் இல்லை. வணிகமும் நடைபெறவில்லை. இக்காலம் நமக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.. அதில் நாம் கவனம் செலுத்துவது முக்கியம். தனிநபர் சுகாதாரம், பொதுசுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னை விட அதிக நிதியை ஒதுக்கவேண்டும்.

சீனாவிலிருந்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் வேறு இடங்களுக்கு மாற முடிவு செய்துள்ளன. அதனை இந்தியா பயன்படுத்திக்கொண்டு நம்மை வளர்ச்சிப்பாதையில் பொருந்திக்கொள்ள முயலலாம். இனியும் நாம் காலாவதியான முட்டாள்தனங்களை கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது. இந்தியாவும் வளர்ச்சிப்பெற்று பொருளாதாரத்தில் உயர முடியாது. இனி நம் ஒரே லட்சியம் இந்தியாவை செல்வ வளம் பொருந்தியாக மாற்றவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

 

 

கருத்துகள்