கொரோனா தோல்வியை அரசு மறைக்க முயல்கிறது!










Ananda Vikatan - 05 June 2019 - கார்ட்டூன் ...


ஆத்மா நிர்மா பாரத்

தோல்வியை மறைக்கும் முயற்சி!

 

இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளைப் பாருங்கள். வங்கதேசம், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நாற்பது நாட்களுக்களுக்குள்ளாகவே கோவிட் -19 நோய்த்தொற்றை எதிர்கொண்டு மக்களை அதிலிருந்து மீட்டுவிட்டனர். இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, தனிமைப்படுத்தல், மருந்துகள் ஆகியவற்றை விட யார் மூலம் நோய் அதிகம் பரவியது என்பது பற்றிய விவகாரங்களே இன்னும் தீரவில்லை. இந்துவா, முஸ்லீமா எந்த மத நம்பிக்கையாளர் இதனை பரப்பினார் என வெறுப்புடன் பேசிவருகிறார்கள்.

பொதுமுடக்க காலம் 67 நாட்களை எட்டிவிட்டது. இன்னுமே கூட நாம் மாதத்திற்கு ஏதாவது நாளை தேர்ந்தெடுத்து மாடிக்கு வந்து தட்டுகளை தட்டுவது, சங்கு ஊதுவது, மெழுகுவர்த்தி கொளுத்துவது, விளக்கேற்றுவது, குப்பைகளை கூட்டிக்கொண்டிருப்பவர்கள் மீது பூக்களை தூவுவது என பல்வேறு சிறுபிள்ளைத் தனங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். இதன்மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தெருக்களை சுத்தம் செய்பவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்? மருத்துவ உபகரணங்களுக்காக அரசை மன்றாடி வரும் அரசு மருத்துவர்களுக்கு மனநிம்மதியைப் பெற்றுத்தருமா? உண்மையில் இதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

அரசு யாருக்கு கரிசனை காட்டுகிறது, யார் பக்கம் இருக்கிறது என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல. அதைத்தான் குர்கானிலிருந்து காலில் காயம்பட்ட தனது தந்தையை பீகார் வரை சைக்கிளில் அழைத்துச்சென்ற சிறுமி பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைத்து பொருட்களை தயாரிக்க வலியுறுத்தும் திட்டத்தை பிரதமர் அண்மையில் கூறினார். அரசை விட தன்னை நம்புவதே விடுதலை தரும் என பீகார் சிறுமி ஜோதி குமார் பஸ்வான் நம்பினாள். அதனால்தான், 1200 கி.மீ தூரத்தை அவளால் மனவலிமையுடன் கடந்து பீகாரின் தர்பங்காவுக்கு செல்ல முடிந்தது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுமுடக்க காலத்தில் சாலையில் நடந்துவருவது அனைத்து கட்சிகளுக்கும் எரிச்சலை ஊட்டின. குறிப்பாக ஏழைமக்களுக்காக உழைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏறிய பாஜகவிற்கு. இதன்காரணமாக, இதைப்பற்றிய  பேசிய முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல்காந்தியை, தொழிலாளர்களின் பெட்டியை தூக்கி சுமக்கவேண்டியதுதானே? அரசின் நிதியமைச்சர் எளிமையாக விமர்சித்தார். எப்படி இவர்களால் இந்த சூழலில் பேச முடிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை போல திடீரென அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க உத்தரவு மக்களை உண்மையில் முடமாக்கிவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத வலியை அவர்களது மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. அரசு தன் உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவீதத்தை தொழில்நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் பின்னர் அது தவறான தகவல். கூடுதலாக அறிவிகப்பட்ட தொகை குறைவானதுதான் என வல்லுநர்கள் பின்னர் கண்டுபிடித்து செய்தி வெளியிட்டனர். அரசு தன் தோல்வியை வெவ்வேறு சுலோகங்கள், கேப்ஷன்கள் சொல்லி மறைக்கவே முயல்கிறது. ஏழை மக்களின் மீதான கரிசனம் பிரதமர் மோடியின் பேச்சில் இன்றுவரை லென்ஸ் வைத்து தேடினாலும் கிடைக்காது. இவரின் அடியொற்றி அரசின் தோல்வியை மறைப்பது, நெருக்கடி காலகட்டத்திலும் தங்களது எதிரிகள் மீது வழக்குகளைத் தொடுத்து அவர்களை களையெடுப்பது என ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது.

இக்காலகட்டம் நமக்கு எதுமாதிரியான அரசு தேவை என்பதை மக்களுக்கு தலையில் கொட்டினாற்போல புரிய வைத்திருக்கிறது.

நன்றி: டெக்கன் கிரானிக்கல்

ஆங்கிலத்தில்: ஆனந்த் கே சகாய்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்