இடுகைகள்

கௌதம் அதானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

8. மோசடி செய்துவிட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றிய கேட்டன் பரேக் - மோசடி மன்னன் அதானி

படம்
  இந்தியாவில் இயங்கிய பங்குத் தரகர், கேட்டன் பரேக். முறைகேடுகள் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வந்ததும் அவரும், அவரின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளும் தங்களது பங்கு வர்த்தக செயல்பாடுகளை லண்டனுக்கு இடம் மாற்றிக்கொண்டனர். பங்குச்சந்தையைச் சேர்ந்த பங்கு தரகர்கள், கேட்டன் பரேக் தற்போதும் கூட தனது தொழிலை கைவிடாமல் செய்து வருவதாக கூறினர். ‘’கேட்டன் பரேக்கிடம் முன்னர் பங்கு வர்த்தகம் செய்த தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் இப்போதும் அவரிடம் தொடர்பிலுள்ளனர்’’ கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய தொடர்பு கொண்ட பங்கு வர்த்தகர் தகவல் கூறினார். இந்திய ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டன் பரேக் செய்த முறைகேடுகளைப் பற்றி விசாரித்து, இறுதியாக தடை, அபராதம் ஆகியவற்றை விதித்தனர். 2001ஆம் ஆண்டு இந்திய அரசு, கேட்டன் பரேக்கிற்கு தண்டனை விதித்தது. பிறகுதான், வேறுவழியில்லலாத கேட்டன் பரேக் தனது செயல்பாடுகளை இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்கு மாற்றிக் கொண்டார். இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்களின்படி தெரிய வந்தது. ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு பல்வேறு நபர்கள் மூலம் கிடைத்த தகவல

கௌதம் அதானி செய்த மோசடிகள் - ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள்

படம்
    கௌதம் அதானி, சமையல் பொருட்கள், மின்சாரம், கட்டுமானம், என ஏராளமான தொழில்களை நடத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 2013ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார். தொழிலதிபர், அவர் செய்யும் தொழில்கள், ஈட்டும் வருமானம் பற்றி சாமானிய மக்கள் ஆர்வம் கொள்ளவோ, பெருமைப்படவோ,   கவலைப்படவோ ஏதுமில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் தொகையைப் பெற்றுள்ளளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின்(எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி) நிதி முதலீட்டையும் தனது அதானி குழும பங்குகள் மூலம் ஈர்த்துள்ளது. அதானி நிறுவனம் கடன் தொகையை கட்டாதபோது, அல்லது அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தால் மக்களே அதன் விளைவுகளை ஏற்று சிலுவையை சுமக்க நேரிடும். அதானி குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை 81,234.70 கோடி. இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மே