இடுகைகள்

திஷா ரவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜென் இசட் இளைஞர்களை மத்திய அரசு பிரச்னைக்குரியவர்களாக கருதுகிறது! - திஷா ரவி, சூழல் போராட்டக்காரர்

படம்
                ஐந்து மாதங்களுக்கு முன்னர் சூழலுக்காக போராடும் இளைஞர்களை மத்திய அரசு இளம்பெண் ஒருவரை கைது செய்து மிரட்டியது . அவர்தான் பெஙுகளூருவைச் சேர்ந்த திஷா ரவி . விவசாயிகள் போராட்டத்திற்கான இணைய டூல் கிட்டை இவரே வெளியிட்டார் என வழக்கு பதிவு செய்தனர் . டீசல் செலவையும் கூட பொருட்படுத்தால் டெல்லியிலிருந்து போலீசார் பெங்களூருவுக்கு சென்று சூழல் பயங்கரவாதியான திஷா ரவியை வலை விரித்து பிடித்தனர் . பிறகு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தேடிக்கொண்டிருக்கிற நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது . இந்தியாவின் புதிய தேச துரோகி , பயங்கரவாதி என ஊடகங்கள் அலறிய திஷாவுக்கு வயது 22 தான் . அவரிடம் பேசினோம் . கடந்த பிப்ரவரியில் உங்களை கைது செய்தார்கள் . இப்போதும் உங்களுக்கு வெளிப்படையாக அரசுக்கு எதிராக பேச பயமாக இருக்கிறதா ? தவறுகள் நடந்தால் நான் அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவேன் . நான் உள்ளுக்குள் பின்விளைவுகளை எண்ணி பயந்தாலும் எப்போதும் மனதுக்கு சரி என்று படுவதை பேசுவேன் . எனது வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே எளிதாக கிடைத்துவிடவில்லை . எனவே வெளிப்படையாக பேசும் தன்மைக்கு