இடுகைகள்

அறிவியல்- விண்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்கல மனிதர்கள்!

படம்
விண்கல மனிதர்கள்! 1961 ஆம் ஆண்டு ஏப்.12 அன்று சோவியத் ரஷ்யாவின் வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று முதல்வீரர்(108 நிமிடங்கள் இருந்தார்) என்ற சாதனை படைத்தார். இதேயாண்டில் மே 5 அன்று, அமெரிக்க வீரர் ஆலன் பி ஷெப்பர்ட் புராஜெக்ட் மெர்குரி திட்டத்தில் விண்வெளிக்கு சென்று 15 நிமிடங்கள் செலவிட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று சோவியத் பெண் வீரரான வாலென்டினா விளாதிமிரோவ்னா வோஸ்டாக் 6 விண்கலத்தில் விண்வெளி சென்ற சாதனை படைத்தார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, சோவியத் வீரர் அலெக்ஸி லியோனோவ் முதன்முதலில் விண்வெளியில் நடந்த பெருமை பெற்றார். 1969 ஆம்ஆண்டு ஜூலை 20 அன்று அப்போலோ 11 விண்கலத்தில் நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஜூனியர் அதில் நடந்து சாதித்தனர். 1984 ஆம்ஆண்டு ஏப்.2 அன்று இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, சோவியத் விண்கலத்தில் ஏறி விண்வெளி தொட்டார்.  

வியாழனில் என்ன நடக்கிறது?

படம்
வியாழனின் மின்னல் ! வியாழனில் ஏற்படும் மின்னல் குறித்த ரகசியங்களை நாசா கண்டறிந்துள்ளது . முதன்முதலில் இது குறித்த தகவலை 1979 ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் கண்டறிந்தது . தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பூமியிலும் , வியாழனிலும் ஏற்படும்  மின்னல்களில் வேறுபாடு உண்டு என நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . " மின்னல் என்பது எந்த கோளில் ஏற்பட்டாலும் அது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் " என்கிறார் கலிஃபோர்னியா பசடெனா நாசா ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஷனோன் ப்ரௌன் .  Microwave Radiometer Instrument (MWR) எனும் கருவியை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள் . இக்கருவி ஜூபிடரிலிருந்து வெளியாகும் அலைகளை பதிவு செய்கிறது . முதலில் கிடைத்த கிலோஹெர்ட்ஸ் தகவல்களை விட மின்னல் பற்றிய தகவல்கள் தற்போது மெகாஹெர்ட்ஸில் சேகரிப்பதாக நாசா கூறுகிறது . வாயேஜர் 1&2, காசினி , ஜூனோ (377 முறை ) ஆகியவை வாயுக்கோளான வியாழனின் ஏற்படும் மின்னல்களை பதிவு செய்து வருகிறது . பூமியை விட 25% குறைவான சூரியவெப்பத்தை வியாழன் பெறுகிறது . ஜூலை மாதம் ஜூனோ வியாழனை மிக அருகில் சுற்றிவரவி

வெள்ளை நிற விண்வெளி உடை ஏன்?

படம்
வெள்ளுடை வீரர்கள் ! விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் எந்த நாட்டுக்காரர்கள் என்பதை கவனித்த அளவு அவர்களின் உடை சொல்லிவைத்தாற்போல வெள்ளை நிறத்திலேயே இருப்பது குறித்து பலரும் கவனித்திருக்க மாட்டார்கள் . ஏன் வெள்ளை நிறம் ? விண்வெளியில் வெப்பம் மற்றும் குளிர் இரண்டுமே அதிகமாக இருக்கும் . விண்வெளி உடையில் உடலை குளிர்விக்க , வெப்பப்படுத்த வசதிகள் உண்டு என்றாலும் பெரும்பாலும் வெப்பத்தை வெள்ளை நிறம் உடனே பிரதிபலித்துவிடும் . பெரும்பாலும் சூரியனின் கதிர்களை இம்முறையில் தவிர்க்கலாம் . மேலும் பூமியின் நிழல் விண்வெளி வீரர் மேல் விழுந்து மறைத்தாலும் கூட சக வீரர்கள் வெள்ளுடையை எளிதில் அடையாளம் கண்டு காப்பாற்ற முடியும் .

உலகில் நன்னீர் தேடும் நாசா!- புதிய செயற்கைக்கோள் ஏவியது

படம்
குடிநீர் தேடும் நாசா !- ச . அன்பரசு செயற்கை அறிவு , வாய்ஸ் உதவியாளர் என டெக் உலகில் கண்டுபிடிப்புகள் குவிந்தாலும் உணவு , குடிநீர் ஆகிய அடிப்படைகளுக்கே   மக்கள் தடுமாறினால் அறிவியலாளர்களின் ஐக்யூவே அவர்களை கேள்வி கேட்காதா ? விண்வெளி ஆய்வில் வின்னரான நாசா இதற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது . பூமியிலுள்ள குடிநீர்வளம் குறித்த ஆய்வை செயற்கைக்கோள் மூலம் செய்துள்ளது . இதில் மனிதர்களின் நீர்மேலாண்மை , இயற்கைக்கு ஏற்பட்ட கேடுகள் , பருவச்சுழற்சி மாற்றங்கள் ஆகியவை அலசப்பட்டுள்ளன . நாசா மற்றும் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 14 ஆண்டுகால ஆராய்ச்சி இது . உலகிலுள்ள 34 பகுதிகளை ஆராயும் திட்டத்தின் பெயர் கிரேஸ் . லேண்ட் செயற்கைக்கோள்கள் மூலம் 2002-2016 வரை செய்த ஆராய்ச்சி முடிவு அண்மையில் வெளியாகியுள்ளது . " செயற்கைக்கோள் மூலம் உலகிலுள்ள நன்னீர வளத்தைக் கண்டறியும் முதல் முயற்சி இது " நாசாவின் கோடார்ட் நீர்வள அறிவியல் இயக்குநர் மேட் ரோடெல் . இதில் எல் - நினோ , லா - நினோ ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் வெள்ளம் , வறட்சி , ஆழ்குழாய் பயன்பாடு மூல

சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோள் உண்மையா?

படம்
சூரியக்குடும்பத்தில் புதிய கோள் !- ச . அன்பரசு சோலார் குடும்பத்தில் புதிய கோளுக்கு அட்மிஷன் கிடைத்துள்ளதாக அண்மைய ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது . ப்ளூடோவை கோளாக கருதமுடியாது என ஆராய்ச்சியாளர்கள் 2006 ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டதால் அதனை நாம் கணக்கில் கொள்ளவேண்டியதில்லை . டார்க் எனர்ஜி ஆய்வு முறையில் நெப்டியூனை கடந்து பெரிய வடிவில் சூரியனைச் சுற்றிவரும் புதிய கோளுக்கு 2015 BP519 என்று பெயர் சூட்டியுள்ளனர் . " பூமியின் வட்டப்பாதையிலிருந்து 54 டிகிரி கோணத்தில் 35-862 மடங்கு பெரியதான வட்டப்பாதையில் இக்கோள் பயணிக்கிறது ."  என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ஜூலியட் பேக்கர் . புதிய கோளை மாடலாக உருவாக்கி அதன் இயக்கத்தை கணித்து வருகின்றனர் . சூரியனுக்கு பின்புறமாக உள்ளதாக கருதப்படும் 2015 BP519 எனும் இக்கோள் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போல வாயுக்கள் நிரம்பியதாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூட்டிக்கழித்து சொன்ன கணக்கு . ஏன் இக்கோளின் இருப்பை உறுதிப்படுத்

சூரியனை ஆராயப்போகிறது நாசா!- எப்படி சாத்தியம்?

படம்
ஆபரேஷன் சன் ! வரும் ஜூலை 31 அன்று கென்னடி விண்வெளி மையத்தில் இதுவரை செய்யாத சாதனை நிகழ்த்தப்போகிறது நாசா . பல்வேறு கோள்களை ஆராய்ந்த நாசா , அடுத்த ஆராயப்போவது சூரியனைத்தான் . பார்க்கர் என பெயரிடப்பட்டுள்ள ஆளில்லாத விண்கலம் சூரியனை நோக்கி செல்லவிருக்கிறது . ஏழு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த திட்டம் வெற்றியடைந்தால் சூரியனில் நிகழும் வேதிவினைகளையும் , பூமிக்கு கிடைக்கும் வெப்பம் பற்றிய புதிய செய்திகளை அறிய முடியும் . 2024 ஆம் ஆண்டு சூரியனை 6.3 மில்லியன் கி . மீ தூரத்தில் நெருங்கும் பார்க்கர் விண்கலம் , வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தாங்க 11.5 செ . மீ தடிமனுள்ள கார்பன் கவசத்தைக் ( தாங்கும் சக்தி 2500 டிகிரி செல்சியஸ் ) கொண்டுள்ளது .  இயற்பியலாளர் யூஜென் பார்க்கர் பெயரிடப்பட்ட விண்கலத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது . சூரியனுக்கு செல்லும் முதல் விண்கலம் என்பதால் , உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது . பெயர்களை மைக்ரோசிப்பில் பொறித்து விண்கலத்தில் இணைத்து சூரியனுக்கு அனுப்புவார்கள் . விண்வெளியிலும் வெற்றிக

செயற்கைக்கோள் காணாமல் போனது எப்படி?

படம்
இஸ் ‌ ரோ தேடும் செயற்கைக்கோள் ! மார்ச் 29 அன்று ஏவிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் அது .  ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6 ஏ ஏப்ரல் 1 அன்று விஞ்ஞானிகளை ஏமாற்றியது . இரண்டாம் வட்டப்பாதைக்கு திட்டப்படி மாறிய ஜிசாட்டிலிருந்து சிக்னல் ஏதும் வரவில்லை . இஸ் ‌ ரோ இதுவரை தொட்டது அனைத்தும் துலங்கியது . மொத்தம் 104 செயற்கைக்கோள்களையும் ஏபிடி பார்சல் சர்வீஸ் போல விண்ணுக்கு அனுப்பியது இதுவரை எந்த நாடும் செய்யாத இந்தியச்சாதனை . அடுத்து சந்திரயான் 2 திட்டத்தை இத்தோல்வி பாதிக்குமா ? " விண்வெளி திட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம் . நாங்கள் ஜிசாட்டை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் . இதற்கும் அடுத்து திட்டமிட்டுள்ள செயற்கைக்கோள்களுக்கும் தொடர்பில்லை " என்கிறார் இஸ் ‌ ரோவைச் சேர்ந்த பேராசிரியர் சிவதாணுப்பிள்ளை . இஸ் ‌ ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் நாற்பதுமுறை ஏவப்பட்டு , ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது . ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டைச் சேர்ந்த Angosat-1 கடந்தாண்டு டிசம்பரில் கஜகஸ்தானிலிர