உலகில் நன்னீர் தேடும் நாசா!- புதிய செயற்கைக்கோள் ஏவியது
குடிநீர் தேடும் நாசா!- ச.அன்பரசு
செயற்கை அறிவு, வாய்ஸ்
உதவியாளர் என டெக் உலகில் கண்டுபிடிப்புகள் குவிந்தாலும் உணவு, குடிநீர் ஆகிய அடிப்படைகளுக்கே
மக்கள் தடுமாறினால் அறிவியலாளர்களின் ஐக்யூவே அவர்களை கேள்வி
கேட்காதா? விண்வெளி ஆய்வில் வின்னரான நாசா இதற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
பூமியிலுள்ள குடிநீர்வளம் குறித்த ஆய்வை செயற்கைக்கோள்
மூலம் செய்துள்ளது. இதில் மனிதர்களின் நீர்மேலாண்மை,
இயற்கைக்கு ஏற்பட்ட கேடுகள்,பருவச்சுழற்சி மாற்றங்கள்
ஆகியவை அலசப்பட்டுள்ளன.
நாசா மற்றும் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 14 ஆண்டுகால ஆராய்ச்சி இது. உலகிலுள்ள 34 பகுதிகளை ஆராயும் திட்டத்தின் பெயர் கிரேஸ். லேண்ட் செயற்கைக்கோள்கள்
மூலம் 2002-2016 வரை செய்த ஆராய்ச்சி முடிவு அண்மையில் வெளியாகியுள்ளது.
"செயற்கைக்கோள் மூலம் உலகிலுள்ள நன்னீர வளத்தைக் கண்டறியும் முதல்
முயற்சி இது" நாசாவின் கோடார்ட் நீர்வள அறிவியல் இயக்குநர்
மேட் ரோடெல். இதில் எல்-நினோ, லா-நினோ ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் வெள்ளம்,
வறட்சி, ஆழ்குழாய் பயன்பாடு மூலம் நீர்வளம் குறைவது
ஆகிய அம்சங்களுக்கும் இந்த ஆய்வு முக்கியத்துவம் தந்திருக்கிறது.
அன்டார்டிகாவில் பனி உருகுவதை செய்தியாக படித்து
கடந்திருப்போம். ஆனால் அன்டார்டிகாவில் மட்டுமல்ல, ஏரி ஆறு, நிலம், பனி என பல்வேறு
இடங்களிலும் நன்னீரின் இருப்பு குறைந்து வருகிறது என்பதே ஷாக் தகவல்.
"மழை அதிகமான பகுதிகள் அதிக மழைவளத்தையும், வறட்சியான பகுதிகள் அதிக வறட்சியையும் சந்திக்கும்படி பருவச்சூழலும் நீரியலும்
பெருமளவு மாறியுள்ளது." என்கிறார் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்
ஜேம்ஸ் ஃபேமிகிலியெட்டி. 2002 ஆம் ஆண்டு ஏவப்பட்ட கிரேஸ் செயற்கைக்கோள்கள் ஜெர்மனி விண்வெளி மையத்தோடு இணைந்து
குடிநீர் குறித்த ஆய்வுகளை செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இறுதிவரை
குடிநீர் வளங்கள் குறித்த ஆதாரங்களை இச் செயற்கைக்கோள்கள் திரட்டியுள்ளன. இதில் முக்கியமாக ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுவது, விவசாய
பாசனத்திற்கான நீர் தட்டுப்பாடு குறித்துதான்.
2007-2015 வரை கலிஃபோர்னியாவில் 4 ஜிகா டன்னும், 2002-2016 ஆம் ஆண்டுவரை சவுதி அரேபியாவில்
6.1 ஜிகாடன்னும் நன்னீர் இழப்பு ஏற்பட்டுள்ளது என லேண்ட்சாட் செயற்கைக்கோள்
தகவல் கூறுகிறது. 1987 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சேகரிக்கப்பட்ட
தகவல்படி சவுதிஅரேபியாவில் பாசன நிலங்கள் அதிகரித்துள்ளதை நீர்தட்டுப்பாட்டிற்கான காரணமாக
ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அனைத்து இடங்களிலும்
வறட்சி என சோகப்பாட்டும் பாடமுடியாது. இயற்கை மழை வறட்சி என மாறி
மாறி விளையாடி வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள போஸ்ட்வானா(ஒகாவாங்கோ,ஸாம்பெஸி) இதற்கு நல்ல
உதாரணம்.
இங்கு 2002-2016 வரை நிலத்தடி
நீர் தொடர்ந்து அதிகரித்து தோராயமாக 29 ஜிகாடன்னாக உயர்ந்துள்ளது.
ஒரு ஜிகாடன் நீரை 4 லட்சம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களில்
நிரப்பலாம்.
சீனாவின் ஜின் ஜியாங் உள்ளிட்ட பகுதிகளில்(ஆண்டுக்கு 5.5. ஜிகாடன் நீரிழப்பு) நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்துவர மழைபொய்ப்பது மட்டும் காரணமல்ல.
சுரங்கங்கள், தவறான நீர்மேலாண்மை, விழிப்புணர்வின்றி விவசாயப்பரப்பை அதிகரித்தல் ஆகியவையும் முக்கியக்காரணம்.
விரைவில் விண்ணுக்கு செல்லும் கிரேஷ் ஃபாலோஆன், புவியியல் குறித்த நம் அறிவை மேலும் விரிவாக்கும் என நம்பலாம்.
நிலைமை எப்படி?
1951-2011 வரை குறைந்த நீரின் விகிதம்
- 70%(தனிநபருக்கு) 2050(22%)
நிலத்தடிநீர் பயன்பாடு(ஆண்டுதோறும்) - 230 க்யூபிக் கி.மீ(இந்தியா), 110 க்யூபிக் கி.மீ(அமெரிக்கா)
விவசாயம் மற்றும் குடிநீர் -
60%, 85%
சிங்கப்பூர் மாடல் -
30%(சுத்திகரிப்பு), 20%(மழைநீர் சேகரிப்பு)
(Press Information Bureau, timesofindia mar 11,2018)