இந்தியாவில் டீ பிஸினஸ்!
தேநீர் விருந்து!
பால், சர்க்கரை
சேர்த்து தேயிலையின் மெல்லிய கசப்பை குறைத்து தேநீர் அருந்துவது இந்தியர்கள் வழக்கம்.
நீலகிரி, அசாம், டார்ஜிலிங்,மேகாலயாவில் விளையும் உயர்தர தேயிலை குடிபானங்களின் சந்தை விகிதம் 79%.
மதிப்பு 30 பில்லியன் டாலர்(2017). வளர்ச்சிவிகிதம்(20-30%).
"டார்ஜிலிங்கில்
விளையும் தேயிலையில் 80% ஏற்றுமதியாகிவிடுகிறது. விலை அதிகம் என்பதால் இந்தியர்கள் இதன் சுவையை அறியமுடியாமல் போகிறது"
என்கிறார் டீபாக்ஸ் நிறுவனர் கௌசல் துகார். இவரது
நிறுவனத்தில் Himalayan Wine Tea, Muscatel Black Tea, Rum & Raisin
Tea ஆகிய ஃப்ளேவர்களில் தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.
ப்ரீமியம் டீ விற்பனையகங்களில்
பல்வேறு ப்ளேவர்களில் பல்வேறு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல
காபி விற்கும் கடையான ஸ்டார்பக்ஸில் புதிதாக பதினெட்டு வகை தேநீர்வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதில் மல்லிகை, மாதுளை ஆகிய ப்ளேவர்கள் உண்டு.
தேயிலை சந்தையில் 5% கொண்டுள்ள இலங்கையின் தில்மா
நிறுவனமும் இந்தியாவில் புதிதாக பிளாக் டீ(இங்க்லீஷ் பிரேக்ஃபாஸ்ட்,
சிலோன் சுப்ரீம்), ப்ளேவர் பிளாக் டீ, சிலோன் க்ரீன் டீ உள்ளிட்ட புதிய வகைகளை சந்தைப்படுத்த உள்ளது.