தவிக்கும் 9 லட்ச அகதிகள்!
அப்டேட்டாகும்
ஐஐடி!
இந்திய அரசின்
உயர்கல்வி நிறுவனமான ஐஐடிகளும் தன் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளன. தற்போது
செயல்பட்டு வரும் 23 ஐஐடிக்கள் பாடத்திட்டத்தை வெறும் தொழில்நுட்பம்
என மட்டும் அமைக்காமல் கலை, சமூகம், மனிதநேயம்
தொடர்பான விஷயங்களை உட்புகுத்த முடிவுசெய்துள்ளதாக ஐஐடி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
"பொறியாளர்களை
புதுமைத்திறன் கொண்டவர்களாக உருவாக்க இப்புதிய மாற்றங்கள் உதவும்" என்கிறார் டெல்லி ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ். ஐஐடி இசை, இசைக்கருவிகள் தொடர்பான பாடங்களை உருவாக்க
தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக்காரணம், பிற பட்டதாரிகளைப் போலவே ஐஐடியன்களுக்கும் வேலையின்றி தவித்ததுதான் காரணம்.
பொருளாதார அறிவியல்,உளவியல், தத்துவம் ஆகியவையும் தனிபடிப்புகளாக ஐஐடிகளில் விரைவில் இடம்பெறும்.
2
தாய்மண்ணை இழந்த
ஒன்பது லட்சம் அகதிகள்!
சிரியாவில் நடைபெற்று
வரும் உள்நாட்டுப்போர் காரணமாக இவ்வாண்டில் இதுவரை 9 லட்சத்து
20 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர்.கடந்த ஏழாண்டுகளில்
இடம்பெயர்ந்த அகதிகளில் இந்த எண்ணிக்கையே அதிகம் என ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.
"ஜனவரி
- ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டும் 9 லட்சத்து
20 மக்கள் அகதிகளாகியுள்ளனர். போர் தொடங்கிய காலத்திலிருந்து
உருவான அகதிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகம்" என்கிறார்
ஐ.நா சபையின் சிரியா ஒருங்கிணைப்பாளரான பனோஸ் மும்ஸிஸ்.
சிரியாவின் அருகிலுள்ள நாடுகளில் சிரியாவைச் சேர்ந்த 5.6 மில்லியன் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். புரட்சியாளர்களின்
ஆதிக்கத்திலுள்ள கிழக்கு கூடா, இட்லிப் ஆகிய பகுதிகளிலிருந்து
உருவாகும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2011 ஆம்
ஆண்டிலிருந்து இதுவரை சிரியா போரில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம். பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் மக்களில் உணவு உதவிகள்
60 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்திருக்கின்றன. தற்போது ஐ.நா சபை மாதம்தோறும் 5.5 மில்லியன் மக்களுக்கு உதவிகளை செய்துவருகிறது.
3
நாய் மீது ரோடு!
வளர்ச்சி பணிகளை
வேகமாக செய்வது சரிதான்.
அதற்காக உயிர்களை கண்களுக்கு தெரிந்தே பலியிடுவது அநீதி அல்லவா?
டெல்லியின் ஆக்ராவிலுள்ள
ஃபடேஹாபாத் சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இரவில் தாரை உருக்கி ஜல்லியைக்
கலக்கி பரபரவென விடிவதற்குள் சாலை அமைக்க துடித்த பணியாளர்கள், அருகில் தூங்கிக்கொண்டிருந்த நாயை மறந்துவிட்டனர். விளைவு,
கொதிக்கும் தார் மற்றும் ஜல்லிக்கற்களால் நாயை அரைபாதி மூடி சாலையை அமைக்க,
நாய் கொதிக்கும் தாரினால் உடல் வெந்து ஓடமுடியாமல் சித்திரவதைக்குள்ளாகி
இறந்துபோனது. ஜீவகாருண்யவாதிகளுக்கு செய்தி கிடைத்து வருவதற்குள்,
டெல்லி கார்ப்பரேஷன் உடனே இறந்த நாயின் உடலை ஸ்பாட்டிலிருந்து அகற்றி,
ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நிலைமையை சமாளித்திருக்கிறது."மனிதநேயமற்ற நடவடிக்கை" என கொந்தளித்துபோயுள்ளனர்
விலங்குநல ஆர்வலர்கள்.