அர்மேனியாவின் புரட்சி பிரதமர்!
ரத்தம்
சிந்தாமல் மாற்றம்!
அர்மேனியாவில் கடந்த மே 8 அன்று ஜனநாயக போராட்டக்காரர் நிகோல் பாஷினியான் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார்.
துருக்கி, ஜார்ஜியா, இரான்,
அசெர்பைஜான் ஆகிய நாடுகளை எல்லையாக கொண்டுள்ள முன்னாள் சோவியத் ரஷ்யாவின்
மாநிலமே அர்மேனியா.
புரட்சிநாயகனான நிகோல், தொண்ணூறுகளில் மாணவப் பத்திரிக்கையாளராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று
கவனமீர்த்தார். அரசுக்கு எதிரான பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராக
பணியாற்றியவர், 2009 ஆம் ஆண்டு தெருப்போராட்டங்களை தலைமை தாங்கி
நடத்தியதற்கு பரிசு சிறைவாசம். சிவில் கான்ட்ராக்ட் என்ற கட்சியைத்
தொடங்கி தேர்தலில் வென்று எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். பின் கடந்த ஏப்ரலில் பிரதமர் செர்ஸ் சர்க்ஸ்யானுக்கு புடினோடு தொடர்பிருக்கிறதென
நாடெங்கும் போராட்டம் வெடிக்க, வெல்வெட் புரட்சி தொடங்கியது.
பின் இரு வாரங்களுக்கு பிறகு நாடாளுமன்றம் நிகோல்லை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது.
ஐரோப்பாவுக்கு ஆதரவான நிகோல் 2.9
மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டை ரஷ்ய ஆதரவின்றி எப்படி தற்சார்புடையதாக
மாற்றப்போகிறார் என்பதை அறிய உலக நாடுகள் காத்திருக்கின்றன.