மலேரியாவுக்கு புதிய மருந்து!
மலேரியாவுக்கு சிந்தடிக் ஊசி!
வேதிப்பொருட்களால் செயற்கைமுறையில் தயாரான சிந்தடிக்
தடுப்பூசி இவ்வாண்டின் இறுதியில் மனிதர்களின் மீது சோதிக்கப்படவிருக்கிறது. Plasmodium falciparum எனும்
ஒட்டுண்ணி ஏற்படுத்தும் மலேரியாவை இந்த ஊசிமருந்து தடுக்கிறது. தற்போது கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானாவில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர்
மானுவேல் எல்கின் படாரோயோ முரில்லோ, அவரது மகன் அல்ஃபோன்ஸோ ஆகியோர்
மேற்கொண்டு வருகின்றனர்.
வேதிப்பொருட்கள் மூலம் ரெடியாகும் இந்த செயற்கை
ஊசி மருந்து வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம். குளிர்சாதன முறையில்
மருந்தை பாதுகாக்க அவசியமில்லை. Plasmodium vivax எனும் ஒட்டுண்ணி
இந்தியாவில் மலேரியாவுக்கு பரவக் காரணம். 1987 ஆம் ஆண்டு FIDIC அமைப்பைச் சேர்ந்த மானுவேல்,
தயாரித்த சிந்தடிக் மருந்தை உலகசுகாதார நிறுவனம் ஏற்கவில்லை.
கடந்தாண்டு மட்டும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த
216 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு மலேரியாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரம். மருந்தோடு
சுகாதாரத்தையும் பராமரிப்பது அவசியம்.