டோல்கேட்டில் பணம் கட்டும் நம்பர்பிளேட்!
டிஜிட்டல் நம்பர்பிளேட்!
ரிவைவர் ஆட்டோ
நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Rplate எனும் டிஜிட்டல் நம்பர் பிளேட் கலிஃபோர்னியாவில்
விற்பனைக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஐபேட் போல அழகாக காட்சி தரும்
இதனை காரில் பொருத்தினால் கார் திருடுபோவதை தடுப்பதோடு காரை தானியங்கியாக ரெஜிஸ்டர்
செய்வதால் ஆண்டுதோறும் பதிவு செய்யும் நேரம் மிச்சம். மாதம்
7 டாலர் சந்தாவோடு, பிளேட்டின் விலை
699 டாலர்கள் கட்டினால் போதும். மேலும் இதனை எளிதாக
ட்ராக் செய்ய முடியும் என்பதால் பணியாளர்களை எளிதாக கண்காணித்து வேலை வாங்கலாம்.
மேலும் ஆர்பிளேட்டுகளை
பொருத்தி வங்கி விவரங்களை பதிவு செய்தால் காசு கொடுத்து டோல்கேட்டில் பணம் கட்டவேண்டிய
அவசியமில்லை.
ஆட்டோமேடிக்காக பணம் டோல்கேட் கேஷியருக்கு வங்கி கணக்கு வழியாக சென்றுவிடும்.
இணையக்கொள்ளையர்கள் ஆர்பிளேட்டின் மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் ஆர்பிளேட் தொழில்நுட்பரீதியாக முக்கியமான கண்டுபிடிப்பு
என்பதை மறுக்கவே முடியாது.