ஸ்டார்ட்அப் மந்திரம்!- ஆன்மிகத்திலும் அசத்தலாம்
தொழில் தொடர்பான தொடரை, ஊக்கமூட்டும் இந்திய சாதனையாளர்களின் சாதனைகளை சொல்லும்படி எழுதவேண்டும் என்பது எனது கனவு. இதுகுறித்து ஐடியா முதலில் எனக்கு கிடையாது. கல்வி வேலை வழிகாட்டி நிருபரான வெங்கடசாமிக்கு இத்தொடரை எழுத பரிந்துரைத்தேன். நான் கூறிய தகவல்கள் இணையதளங்களை வியப்புடன் கேட்டவர், இதை நீங்கள் எழுதுவதே சரி என்றார். அப்போது முத்தாரத்தில் இரு தொடர்கள் வெளிவந்துகொண்டிருந்ததால் எடிட்டர் கே.என்.எஸ்ஸிடம் அனுமதி பெற்று ஸ்டார்ட்அப் மந்திரம் பின்னரே தொடங்கப்பட்டது. இத்தொடரை எழுத தி இந்து தமிழ் - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, எம்எல்வி மூர்த்தி, விகடனின் பரிசல் கிருஷ்ணா, பிசினஸ் இந்தியா சுசிலா ரவீந்திரநாத்(பாயும் தமிழகம், கிழக்கு) ஆகிய நூல்களும் உதவியாக இருந்தன. தொடரின் அத்தியாயங்கள் இதோ இப்பொழுதே....
3
ஸ்டார்ட்அப்
மந்திரம்!
ஆன்மிகத்திலும்
அசத்தலாம்!
இணைய
விளையாட்டுத்துறையில் ராஜ்தீப் குப்தா தன் ரூட் மொபைல் நிறுவனத்தின் மூலம் செய்தது
அதைத்தான். இணைய விளையாட்டின் இந்திய உள்நாட்டுச் சந்தை
மதிப்பு 80 கோடி.
முறைப்படுத்தப்படாத
இ-ஸ்போர்ட்ஸ் துறை மதிப்பு 818 மில்லியன் டாலர்கள்(81.8
கோடி) என கிசுகிசுக்கிறார்கள். உலகளவில் இத்துறையில் இந்தியாவின் இடம் பதினேழு. "இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சி
40 சதவிகிதம்.இவ்வாண்டில் கேமிங் போட்டிகளை விரைவில்
தொடங்கவிருக்கிறோம். முதலீட்டுக்கு சிறந்து துறை இது.
முக்கிய நகரங்களில் 4ஜி சேவைகள் வந்துவிட்டதால்
கேமிங் வீரர்களும் நிறையப்பேர் உருவாகிவருகிறார்கள்" என்கிறார்
ராஜ்தீப் குப்தா.
ஆன்மிக
வாய்ப்பு!
இனிவரும்
காலங்களில் ஏஐ உதவியுடன் ஒருவரின் சமூக கணக்குகளை ஹேக் செய்து ஒருவரின் சிந்தனையை டிசைன்
செய்து ஐடியாவையும் திருட முடியும். எதற்கு ஒரு ஸ்டார்ட்அப்
ஐடியாவில் உலகையே மாற்றலாமே! அக்கவுண்ட் கொள்ளாத அளவு காசு சேர்க்கவும்
முடியும். இதற்கான அடிப்படை விதிகளை மிதுல் தமனியின் ஐடியாவுக்குப்
பிறகு பார்ப்போம்.
மொபைல்கள்
மூலம் மக்கள் நிதிச்சேவைகளை எளிதாக செய்ய பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் மிதுல். ரீசார்ஜ் கடைகளில் ஒவ்வொரு பயனருக்கும் வெவ்வேறு போன்களை பயன்படுத்தி டாப்
அப் செய்துகொண்டிருந்த கடைக்காரரைப் பார்த்ததும்" ஏன் அனைத்தையும்
ஒன்றிலேயே செய்யக்கூடாது? என்று தோன்றியது" என்று பேசும் மிதுல் தன் பேவேர்ல்டு ஸ்டார்ட்அப்பில் 630 நகரங்களைச்சேர்ந்த பத்தாயிரம் விற்பனையாளர்களை இணைத்துள்ளார். 2006
இல் தொடங்கிய ஸ்டார்ட்அப்பை நவீனத்திற்கேற்ப அப்டேட் செய்யும் கட்டாயம்
மிதுலுக்கு உள்ளது.