ஸ்டார்ட்அப் மந்திரம் 7!- உணவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, மருத்துவமனை



Image result for zomato



ஸ்டார்ட்அப் மந்திரம் 7

உணவு டெலிவரியில் கொட்டும் காசு!

Related image


உணவுசேவைத்துறைக்கு வந்த ஸோமாடோ மற்றும் ஸ்விக்கி ஆகியோர் டெலிவரி தொகையை 35% குறைத்துள்ளனர். ஸோமாடோ, தன் கட்டமைப்பு மூலம் உணவகங்களின் பிராண்டையும் பிஸினஸையும் விரிவாக்குகின்றன. இதில் ஸ்விக்கி, க்ளவுட் கிச்சன் என்ற புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது."தொழிலைத் தொடங்கிய 18 மாதங்களுக்கு சந்தையில் தாக்குப்பிடிக்க அதிக முதலீடு தேவை. அப்படி நிற்கமுடியாதபோது உங்கள் சந்தையும் வெற்றிபெற்றவர்களுடைய கைக்கு போய்விடும் அபாயம் உள்ளது" என்கிறார் முதலீட்டாளரான கணேஷ்.



கைநிறைய காசு!

குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு - ரூ.350
ஹோட்டல் கமிஷன் - 20%
பட்டுவாடா விலை - 18%
நிர்வாக செலவு - 7%
வருமானம் - 25%
(Redseer நிறுவன தகவல்படி…)

உணவு, மென்பொருள் மட்டுமல்ல விர்ச்சுவல் ரியாலிட்டியிலும் ஸ்டார்ட்அப்கள் தொடங்க நம்பிக்கை தருகிறார் ராகுல் தேஷ்பாண்டே. "எனக்கு சொந்த தொழில் தொடங்கும் பேராசை முதலிலேயே இருந்தது. நான் பாரத்த வேலையை விட்டுவிட்டு என் மனம் சொன்னபடி இதோஸ் டிசைன்ஸ் கம்பெனியை தொடங்கினேன்" என்பவர் பல்வேறு கேள்விகளை தானாகவே கேட்டு தீர்வு கண்டிருக்கிறார்.

மக்களுக்கு கதை கேட்கும ஆர்வத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி நிறுவனத்தின் ஐடியாவாக்கினார் ராகுல். பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான துறைகள் விஆருக்கு வாய்ப்புகள் உள்ளன. "இளைஞர்களாக கொஞ்சம் கிறுக்குத்தனமும், கிரியேட்டிவிட்டியும் தேவைப்படும் வேலை இது" என சிரிக்கிறார் ராகுல். இங்கு 40% பெண்களே பணிபுரிகின்றனர்.  


பிஸினஸில் கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்தவகையில்  பெங்களூருவில் புற்றுநோய்க்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கியுள்ளார் சுரேஷ் ராமு.  1999 ஆம் ஆண்டு ஐஐஎம்மில் பட்டதாரியான சுரேஷ், மருத்துவ ஆராய்ச்சி துறையில் 10  ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். "2012 ஆம் ஆண்டு என் நண்பருக்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட, சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமானார். ஏன் இந்தியாவில் தரமான புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைகள் இல்லை என்று யோசித்து 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மருத்துவமனையை உருவாக்கினோம்" என புன்சிரிப்புடன் தன் தொழில்முயற்சியை பகிர்ந்தார் சுரேஷ். இவரின் மருத்துமனையில் 3 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.
                                  




பிரபலமான இடுகைகள்