லைபீரியாவில் நம்பிக்கையூட்டும் அரசியல் இளைஞர்!
லைபீரியா கிங்மேக்கர்!
இருபதாண்டுகளுக்கு
முன்னர் லைபீரியாவில் எடி ஜார்வோலோ ஆதரவற்ற குழந்தை. இன்று Naymote
Partners for Democratic Development எனும் அமைப்பின் மூலம் அரசுக்கும்
மக்களுக்கும் பாலமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்."மக்களிடன்
ஓட்டு வாங்கி வென்ற தலைவர்களை அணுகவே முடியாததுதான் சிக்கல்" எனும் எடி, அரசையும் இளைஞர்களையும் இணைக்க முயற்சித்து
வருகிறார். அண்மையில் இளவரசர் கெர்மு மோயே உள்ளிட்ட ஆறு சட்டமன்ற
உறுப்பினர்களை நைமோட் நிகழ்வில் பங்கேற்க வைத்து 50 இளைஞர்களிடம்
உரையாட வைத்துள்ளார்.
லைபீரியாவில் ஜனநாயகம்
இன்னும் அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை நிதியுதவியில்தான் உயிர்பிழைத்துள்ளது.
பெரும்பாலான சமூக நிறுவனங்களின் பட்ஜெட் 2 லட்சம்
டாலர்களையே இன்னும் தாண்டவில்லை. 18-35 வயதுக்குட்பட்ட நேர்மையான
அரசியல் தலைவர்களை உருவாக்க பள்ளியும்(2016) தொடங்கி நடத்திவருகிறார்
எடி. சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள், அவற்றை தடுப்பதற்காக சட்டங்கள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு விளக்குவதற்கான பட்டறைகளையும்
பள்ளியில் நடத்திவருகிறார் எடி. உள்நாட்டுப்போரால் உருக்குலைந்த
லைபீரியா நாட்டின் புதிய நம்பிக்கையூட்டும் அரசியல் சக்தியாக எடி ஜார்வோலோ உருவாகி
வருகிறார்.