வீக் எண்ட் பிட்ஸ்! சிங்கராஜா வித் சங்கிலி



Image result for vennela kishore




பிட்ஸ்!

நோயாளியின் நண்பன்!

உத்தர்காண்ட்டைச் சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேந்திர பகுகுணா, போக்குவரத்து பணியில் இருந்தார். அப்போது அவ்வழியே வந்த  ராஞ்சி ரஜக்குக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, அவரை  தோளில் சுமந்து யமுனோட்ரியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். தோராயமாக 2 கி.மீ தோளில் ராஞ்சியை சுமந்து சென்று அவரின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர் பகுகுணாவின் மனிதநேயம் மக்களை நெகிழ வைத்துள்ளது.

சிங்கராஜா வித் சங்கிலி!

விலங்குகளை காப்பாற்றவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி சொன்ன ட்விட்டர் மெசேஜ், அவரின் ஆளுமைக்கே  ஆப்பு ஆகிவிட்டது. மானுக்கு பால் கொடுத்தும், சிங்கத்தை கட்டிப்போட்டு அதன்முன்பு அப்ரிடியின் செல்லமகள் எடுத்தபோட்டோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. "காட்டிலுள்ள சிங்கத்தை சங்கிலியில் கட்டிப்போட்டு விலங்கு பாச மெசேஜ் தேவையா?" அப்ரிடியை தாளித்துவருகிறது இணைய உலகம்.

டான்சுக்கு அப்பா துணை!

பெர்முடாவின் சிட்டிஹாலில் பள்ளிச்சிறுமிகளின் பாலே டான்ஸ் அமர்க்களமாக நடைபெற்றது. அதில் ஆச்சரியம், டான்ஸ் ஆடிய சிறுமியின் தந்தையும் பங்கேற்றதுதான். எதற்காக? சிறுமியின் டான்ஸ் பயம்போக்கத்தான். கையில் குழந்தையுடன் தன் மூத்தமகளின் டான்ஸ் பயம்போக்கிய தந்தை குறித்த இவ்வீடியோ அப்பா சென்டிமெண்ட்டுக்கு எடுத்துக்காட்டாக வைரல் ஹிட்டாகிவருகிறது.

சைக்கிள் வாங்கினால் ஓணான் பரிசு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள ஹெமட் நகரில் அல் மற்றும் கிறிஸ் பிரம்மெட் ஆகியோர், தம் செல்ல பேத்திக்கு பரிசளிக்க சைக்கிளை இணையத்தில் ஆர்டர் செய்தனர். டெலிவரியான சைக்கிள் கவரை பிரித்தால் கூடவே ஓணான் ஒன்று கண்சிமிட்டி தாத்தா மீது பாசமாய் தாவ அரண்டுவிட்டார் மனிதர். சைக்கிளுடன் ஓணானைக்கூட காம்ளிமென்ட்ரியாக தரமுடியுமா? வாட் எ ஐடியா சார்ஜி? என இணையத்தில் வெளியான இக்கதை பலரையும் யோசிக்க வைத்துள்ளது.