இடுகைகள்

அறிவியல்- ஆண்களுக்கான கருத்தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பக்கட்டுப்பாடு ஆண்களுக்கும் ஈஸி!

படம்
ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு ! ஆணுறை , குடும்பக்கட்டுபாடு ஆகியவை உங்களுக்கு பிடிக்கவில்லையா ? இதற்காகவே ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர் . இம்மருந்து ஆண்களின் ஹார்மோனை பாதிப்பதில்லை என்பதுதான் இதன் ஸ்பெஷல் . அல்ட்ரா ஒலியலைகள் , ஜெல் மூலம் விந்தணுக்களை அழிப்பது ஆகியவற்றைக் கடந்து EP055 எனும் மருந்தை யுஎன்சி சாப்பல் ஹில் மற்றும் ஓரேகான் அறிவியல் மற்றும் உடல்நல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . இம்மருந்து விந்தணுக்களின் வேகத்தை மட்டும் மட்டுபடுத்துகிறது . " விந்தணுக்கள் மிதக்கும் வேகத்தை மட்டுபடுத்தி கருத்தரித்தலை தவிர்க்க இம்மருந்து உதவுகிறது " என்கிறார் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஓ ராண்ட் . விலங்குகளுக்கு செய்த சோதனையில் மருந்து முப்பது மணிநேரங்களுக்கு வீரியமாக இருந்தது . மூன்று வாரங்களுக்குள்ளாகவே விந்தணுக்களின் தன்மை இயல்பு நிலைக்கு மீண்டுவிட்டது . " ஆண்களின் உடலில் பதினெட்டு நாட்களுக்கு பிறகு உடலிலுள்ள விந்தணுக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் " என்கிறார் ஆராய்ச்சியாளரான மேரி ஜெல்லின்ஸ்கி . விரைவில் ஆர