இடுகைகள்

இந்தியா - உர்ஜித்படேல் ராஜினாமா! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மௌன ஆளுநர் விடைபெற்றார்!

படம்
ஏறத்தாழ நிதித்துறை வல்லுநர்கள் எதிர்பார்த்த செய்திதான். ஆச்சரியப்பட ஏதுமில்லை. தனது பணிக்காலம் நிறைவடைவதற்குள் ராஜினாமா செய்யும் முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்தான்(கடந்த 40 ஆண்டுகளில்). ரிசர்வ் வங்கி வரலாற்றில் நான்காவது ராஜினாமா.  பல்வேறு கண்டனங்களை பெற்ற உர்ஜித் படேல் இறுதியாக திடமான முடிவை எடுத்திருக்கிறார். யெஸ் ஓலை கொடுத்துவிட்டார். ரிசர்வ் வங்கியிடமிருந்த உபரி தொகையை அரசிடம் வழங்க சொல்லி வரலாற்றிலேயே மிக நீண்ட சந்திப்பை பாஜக அரசு ஏற்பாடு செய்த செய்தியை அனைவரும் செய்தி வழியே அறிந்திருப்பீர்கள். இப்போது புதிய பொருளாதார ஆலோசகர் பதவியேற்கும் அதேதருணம் 24 ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் 'தனிப்பட்ட' காரணங்களுக்காக பதவி விலகியிருக்கிறார். தனக்கு வளைந்து கொடுக்காத முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை கடுமையாக வசைபாடி(மேலைநாட்டு அறிவுப்படி செயலாற்றுகிறார்!) வேலையிலிருந்து விலக்கியது பாஜக அரசு. உடனே உள்நாட்டு அறிவோடு செயலாற்றுவார் என நிலையில் 2016 ஆம் ஆண்டு செப்.5 அன்று பதவி ஏற்றார். அரசின் நெருக்கடியைப் பொறுக்க முடியாத நிலையலி உர்ஜித் படேல் பதவி விலகியிருக்க