இடுகைகள்

ஜான் லாய்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்து ஊடகங்கள் ஈராக் போரின் போது நடந்துகொண்ட முறை! - நூல் விமர்சனம்

படம்
  வாட் தி மீடியா ஆர் டூயிங் டு அவர் பாலிடிக்ஸ் ஜான் லாய்ட் ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜான் லாய்ட் எழுதிய நூல். தனது செய்தி சேகரித்தலுக்காக முக்கியமான விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய இந்த நூல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊடகங்கள், ஈராக் போரின்போது எப்படி அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டன. அதன் விளைவுகள் என்ன என்பதை ஆராய்கிறது.  அரசின் பணத்தில் இயங்கும் இங்கிலாந்து ஊடகமான பிபிசி, ஈராக் போரின் போது எடுத்த நிலைப்பாடு, அதன் இயக்குநர்கள், தலைவர்கள் எப்படி எதுமாதிரியான கருத்தியல் கொண்டவர்களாக இருந்தனர். அரசியல் ரீதியாக ஊடகங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், கருத்தியல், நிர்வாக ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என பல்வேறு விஷயங்களை நூல் பேசுகிறது. இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஊடகங்களை, அங்கு நடக்கும் ஊடக அரசியல் பற்றி பேசிவிட்டு உடனே இங்கிலாந்து நாட்டின் ஊடக பிரச்னைகளுக்கு ஆசிரியர் திரும்பிவிடுகிறார்.  இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை தனியார் தொழிலதிபர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நேரடியான, மறைமுகமான ஆதரவ