சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்
வோக் டைட்டானியா மெக்ரத் கட்டுரை நூல் ப.103 இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார். காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர...