இடுகைகள்

தோஷம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

ஆயுர்வேத அடிப்படைகளை விளக்கிப் பேசும் நூல்!

படம்
          பதார்த்த விஞ்ஞானம் எல் மகாதேவன் தமிழ்நாடு அரசு மின்னூலகம் பதார்த்த விஞ்ஞானம் என்ற நூல், மொத்தம் 393 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலின் அடிப்படை ஆயுர்வேதம் என்றால் என்ன, அதில் நோய்களை எப்படி மருத்துவர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குவதேயாகும். ஆனால், நூலின் பெரும்பகுதியில் ஆயுர்வேதத்திற்கு அடிப்படையான பல்வேறு மெய்யியல் நூல்களை வரிசையாக விளக்கி கூறிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். பிறகு, ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதைக்கு வருகிறார். வடமொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தமிழ்நூல் என்பதால், வடமொழி சொற்கள், வார்த்தைகள், சுலோகங்கள், பாடல்கள் நிறைய உள்ளன. வடமொழியை புகழ்ந்தும் இறுதியில் வாசகம் உள்ளது. நூல் முடியும்போது, வடமொழியை ஏன் தொன்மை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என தந்திரயுக்தி பகுதி விளக்குகிறது. வடமொழியைக் கற்றவர்கள்தான் ஆயுர்வேதம் கற்க முடியும், கற்கவேண்டும் என அழுத்திக் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் அடிப்படை, மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம் என பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு தெளிவாக விளக்க முனைகிறது...

தந்தை தாயை நேசிக்கவேண்டியது முக்கியம்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
  6 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்களுடைய ராசி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கன்னி ராசி என்று கேள்விப்பட்ட வரையில் அதற்கு உருப்படியான நற்பலன்களை நான் நாளிதழ்களில் கூட படித்தது இல்லை. கடுமையான வறுமை, போராட்டங்கள், தரித்திரத்தை அனுபவித்து கடந்து வரவேண்டியிருக்கும் என்பதுதான் நான் படித்த ஜோதிட நூலில் எழுதியிருந்தது. ஜோதிடருக்கு கூட கன்னி ராசிக்காரர்கள் ஏதோ கெடுவினை செய்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டேன். உங்களுடைய கஷ்டங்கள், சிரமங்கள் இதெல்லாம் ராசி காரணமாகத்தான் நடந்தது என்று கூறவில்லை. படிக்காமல், கற்ற தொழில்திறனை வைத்து முன்னேற நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கை வேறு எப்படி அமைய முடியும்? நான் உங்களிடம் கற்றுக்கொண்ட விஷயமாக நேர்மையையும், ஏற்றுக்கொண்ட பொறுப்பை கவனமாக நிறைவேற்றுவதையும் முக்கியமானதாக நினைக்கிறேன்.   இன்று எனக்கு அலுவலகத்தில் கிடைக்கும் வேலைகள் பலவும் பிறரால் ஏற்கப்படாதவை. நான் முடிந்தளவு கவனமாக செய்ய முயன்று வருகிறேன். வாழ்க்கை முழுக்க தொடரும் சில பிரச்னைகள் கடந்து கடன் க...