அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!
தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்! இன்று இந்தி மொழி திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிவது என்ன? ஆபாச வக்கிரமான காட்சிகள், பெண்களை இழிவாக நடத்துவது, அளவற்ற வன்முறை, மதவாத அரசியலை ஊக்குவிக்கும் அரசுக்கு ஆதரவான படங்கள் என்றுதான் நிலைமை உள்ளது. கதைக்கு தேவையோ இல்லையோ படத்தினுள் கற்பனைக் கதையான அரசியலுக்கு உதவும் ராமாயணம் வந்துவிடும். எதற்கு என பார்வையாளர்களுக்கே புரியாது. இப்படிப்பட்ட குப்பைகளை எடுப்பதற்கு பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. சிலவேளைகளில் இதுபோன்ற மதவாத படங்களை நாட்டின் ஆட்சித்தலைவரே. தனது அமைச்சரவையில் உள்ள குற்றவாளி அமைச்சர்களுடன் அமர்ந்து கண்டு காண்பார். அதைப்பற்றிய பெருமைமிகு விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்வார். இந்த லட்சணத்தில் வீடு இடிக்கப்படும், தொழில்களை மிரட்டி பறிக்கும் அவலமான நெருக்கடி நிலையை சிறுபான்மையினர் எப்படி பிறருக்கு கூறுவது? அதற்காக அவர்களும் கேமராக்களை, செல்போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அரை உண்மையை மட்டுமே எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளை அல்லது மக்களை இழிவுபடுத்தும் கால்நக்கி ஊடகங்கள்...