இடுகைகள்

அதிபர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்

படம்
            சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களை விட டெங்கின் வாழ்க்கை நிறையவே மாறுபட்டது. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் இமாலய உயரத்தையும், பாதாள வீழ்ச்சியையும் கண்டவர். எதிரிகள் பற்றி கவலைப்படாமல் தனது செயல்பாட்டில் கவனம் வைத்து வென்றவர். அரசியல் தொடர்புகள்,தனிப்பட்ட நட்பு, திருமண உறவு ஆகியவற்றின் மூலமே தன் அரசியல் வாழ்க்கையை நீட்டித்துகொண்ட ஆளுமை. சிறுவயதில் வெளிநாடுகளுக்கு அதிக பயணம் செய்து வலம் வந்தவர். சிச்சுவானில் பிறந்தவரான டெங், 1920ஆம் ஆண்டு, பிரான்சுக்கு கம்யூனிஸ்ட் கல்வி கற்கச் சென்றார். அங்குதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு எழுந்தது. பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கல்வி கற்றார். 1927ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவர், தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் காரணமாக எந்நாளைக்குமான ஜென்ம விரோதியாக ஜப்பான் நாடு மாறியது. இன்று, ஒலிம்பிக்கில் நடந்த சில போட்டிகளில் ஜப்பான் நாட்டு அணியிடம் சீன அணி தோற்றுப்போனது. உடனே...

மனதில் நம்பிக்கை இருந்தால் சாதாரண களிமண் கூட தங்கமாக மாறும் - ஷி ச்சின் பிங் உரை

படம்
சோசலிசத்தின் அடிப்படையாக வறுமையை ஒழித்து, மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது முக்கியம். இதன் வழியாக பொதுமக்களின் நலத்தை வளப்படுத்தலாம். வறுமையான சூழலில் உள்ள மக்களின் நிலையை கவனமாக கண்காணிக்க வேண்டும். மரியாதையும் அன்பும் கொண்டு அவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடிந்தளவு முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கும் மேல் உள்ள அவர்களின் தேவைகள், பிரச்னைகளை மனதில் குறித்துக்கொண்டு கட்சி, அரசு ஆகியவற்றின் வழியாக குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற முயலவேண்டும். சீனப் புரட்சிக்கு பழைய புரட்சித்தளங்கள், அங்குள்ள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அதை மக்களும், கட்சியும் என்றுமே மறந்துவிடக்கூடாது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்த செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக மக்களின் வாழ்க்கை பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. சீனா, சோசலிசத்தின் தொடக்க காலத்தில் நிற்பதால் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். கிராம பகுதிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள பகுதிகள் உள்ள நிலையில் வளமான சமூகத்தை கட்டமைப்பது என்பது ...

பன்பட்டர்ஜாம் எக்ஸ்டென்டட் - பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு

படம்
அறிமுகம்... வீரசுப்பி தாஸ், மெகந்தியா நாட்டை ஆளும் சர்வாதிகாரி. முன்னதாக நாடு ஜனநாயக தன்மையில் இயங்கியது. பின்னாளில், கல்வியறிவு இல்லாத மூடநம்பிக்கை கொண்ட விலங்குகளின் குதத்தை வழிபடும் பெரும்பான்மை மக்களே வீரசுப்பியின் ஆதரவாளர்கள். இதற்காக அவர் போலிச்செய்திகளை மெகந்தீயம் என்ற அரசு டிவி, தனியார் டிவி சேனல்கள் வழியாக பரப்பத் தொடங்கினார்.  ஜூமன் என்ற குதிரைக் கடவுளின் பக்தனாக காட்டிக்கொண்ட வீரசுப்பி, பிறகு தானே ஜூமனின் மறுபிறப்பு என கூறிக்கொண்டு தன்னுடைய சிலைகளை நாடெங்கும் வைக்கத் தொடங்கினார். வீரசுப்பிக்கு பொய்,புரட்டு, பித்தலாட்டம் என்ற தாய்க்கழகம் உண்டு. அவரது தொண்டர்களை அங்கிருந்து பொறுக்கி எடுத்து கலவரப்படைக்கு ஆள் சேர்க்கிறார். பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு 2 பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே, நமது நாட்டில் பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் அதற்கு பலியாகி வருகிறார்கள். பரவாயில்லை. பூநூலியர்கள் நோய்த்தொற்றுக்கான சடங்குகளைக்கூறி அதைச்செய்ய கோரிக்கை விடுத்தனர். இத்தனை நாட்கள் மக்கள் வலியிலும...

லத்தீன் அமெரிக்காவில் மக்களின் அபிமானம் பெற்ற சர்வாதிகாரி ! நாயூப் பக்லே

படம்
  கைதிகள் சிறைக்கூடத்தில்.. - எல் சால்வடோர் நாயூப் பக்லே கிரிப்டோகாயினில் அரசு பண முதலீடு மீள முடியாத சிறைவாசம் ட்விட்டரில் சர்வாதிகாரி என அறிவித்தபோது... சால்வடோரில்   உதயமான புதிய சர்வாதிகாரி கழிவறையில் அமர்ந்துகொண்டு கிரிப்டோகரன்சியில் மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்வது, அரசு உத்தரவுகளை, சட்டங்களை சமூக வலைத்தளத்தில் முதலில் வெளியிடுவது, சிறைக்கைதிகளன் அரைநிர்வாண படங்களை வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவது, பேஸ்பால் விளையாட்டு வீரர் போல உடையணிந்துகொண்டு ஊடகங்களை சந்திப்பது என சால்வடோர் மக்களுக்கு அந்த நாட்டு அதிபர் நாயூப் பக்லே காட்டும் காட்சிகள் நிச்சயம் புதிதான். நாட்டில் அவர் செய்யும் செயல்பாடுகளை பார்ப்பவர்களுக்கு கோமாளிக்கூத்தாகவே தெரியும். ஆனாலும் மக்கள் அதை பெரிதாக எதிர்ப்பதில்லை. என்ன காரணம் என்று பார்ப்போம். நாட்டின் புகழ்பெற்ற இமாமிற்கு மகனாக பிறந்தவர், பக்லே. அவருக்கு குடும்பத்தொழிலே விளம்பரப்படங்களை எடுப்பதுதான். அதற்கென குடும்ப ம் சார்ந்த விளம்பர நிறுவனம் உள்ளது. பக்லேவின் மூன்று சகோதரர்கள்தான், இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். தனது அரச...

இனவெறிக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் உழைத்தவர் - மிச்செல் பாச்லெட்

படம்
      1,000 × 667             மிச்செல் பாச்லெட் சிலி நாட்டில் இரண்டு முறை அதிபராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தவர். அண்மையில் ஐ.நா அமைபின் மனித உரிமை அமைப்பில் இருந்து பதவி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலம் முடியும் முன்னர் சீனாவின் ஷின்ஜியாங் நகரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிச்செலின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறும் சில நிமிடங்கள் முன்னதாகத்தான் அவர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது. மிசெல் சிலி நாட்டின் அரசியல்வாதி என்பதோடு, எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் செயல்படும் அதிகாரியும். கூட. அப்படித்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மக்கள் அரசால் பாகுபாடாக பிரிக்கப்பட்டு அவர்கள் துயரப்படக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும் இருந்ததே வழக்கு தொடுக்க காரணம். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இதெல்லாம் எங்கள் உள்நாட்டு வி...

நாயைப் போல இறந்தார் ஐஎஸ் தீவிரவாதித் தலைவர் அல் பக்தாதி!

படம்
புஷ் சதாமை ஒழித்தார். பாரக் ஒபாமா, பின்லேடனை தீர்த்து கட்டினார். இந்த வரிசையில் டிரம்ப், அல் பக்தாதியை நாயைப்போல சுட்டு கொன்றிருக்கிறார். நாய் வார்த்தை நாம் கூறியதல்ல. டிரம்பே தன் ஸ்டைலில் சொன்ன வார்த்தை. ஞாயிற்றுக்கிழமை. நாம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த போது, 8 அமெரிக்க  விமானங்கள் ஈராக்கின் விமானத்தளத்திலிருந்து கிளம்பின. அவை நேராக சிரியாவை நோக்கி சென்றன. 70 நிமிஷ பயணத்தில் மேற்கு சிரியாவிலுள்ள பாரிஷா எனுமிடத்தை அடைந்தன. டெல்டா ஃபோர்ஸ் படையின் ஆதரவுடன் அமெரிக்க விமானங்கள் பக்தாதி பதுங்கியிருந்த இடத்தை நோக்கி தாக்கத் தொடங்கின. கமாண்டோக்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அல் பக்தாதி தன் மூன்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தரைக்கு கீழே இருந்த பதுங்குமிடத்திற்கு சென்றார். அவர் தற்கொலை குண்டுகளைக் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கிறாரோ என கமாண்டோக்கள் அஞ்சினர். இதனை அறிய  ராணுவ நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறுதியில் தப்பிக்க முடியாத பக்தாதி, குண்டுகளை வெடிக்க வைத்து தன் மகன்களோடு தற்கொலை செய்துகொண்டார். அல் பக்தாதி கொலைத் தி...

ராபர்ட் முகாபே - ஜனநாயகவாதியின் தவறுகள்!

ஜிம்பாவே நாட்டின் முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமாகியுள்ளார். 37 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர், மக்களில் வாழ்விலும் கொடுமையான ஆட்சியின் அடிச்சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார்.  2017 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது. இதனால் பதவியிழந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். இவரை விடுதலையின் அடையாளம் என்று அதிபர் எமர்சன் நங்காவா கூறியுள்ளார். பலரும் முகாபேயை சர்வாதிகார அதிபராகவும், நாட்டை நசித்த தலைவராகவும்தான் அடையாளம் காண்கிறார்கள். புதிய அலை எழுந்து அல்ஜீரியா முதல் சூடான் வரை முகாபே போன்ற தலைவர்களை பதவியிழக்கச் செய்த து சுவாரசியமான ஆய்வாகவே இருக்கும். ஜிம்பாவே ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் எனும் கட்சியை தலைமை தாங்கியவர் முகாபே. செய்த போராட்டத்தால், பத்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த தண்டனை முடிந்தபோது மக்கள் அவரை நாயகனாகவே நினைத்து பேசினர். புகழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு புத்திசாலி நாயகனாக இவரையே தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. முகாபே , கருப்பினத்தவர்களுக்கான கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். திட...

அமெரிக்கா! - செனட் அவை செயல்பாடு!

படம்
அமெரிக்காவைப் பற்றிப் பேசாமல் எந்த வரலாற்றையும் எழுதிவிட முடியாது. காரணம், பிற நாடுகளை அழுத்தி உருக்குலைத்தேனும் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பேராசை சுயநலம் அமெரிக்க அரசுகளுக்கு உண்டு. அதற்கு உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களை அச்சமயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் என்று அழைக்கின்றனர். இதில் செனட் சபை, ஹவுஸ் ஆப் ரெஃப்ரசன்ட்ஸ் என இரு பிரிவுகள் உண்டு. இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை நினைவுக்கு வருகிறதா அதேதான். அமெரிக்காவின் காங்கிரசில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெறும். செனட் அவை இங்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. இவர்கள் அதிபரின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதற்கொண்டு தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும்  உரிமை உண்டு. ஒரு மாநிலத்திற்கு இரு செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் செனட் அவையில் நூறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஹவுஸ் ஆப் ரெஃப்ரன்சன்டிவ்ஸ் மொத்தம் 435 உறுப்பினர்கள். பதவிக்காலம் இரண்டே ஆண்டுகள்...