கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!
கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு! சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி. டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு...